பல்லவி
தீபம் ஏற்றவோம் தீபம் ஏற்றுவோம்
காவடிப் பிரியனுக்கு தீபம் ஏற்றுவோம்
அனுபல்லவி
மலை ஏறி தீபம் ஏற்றுவோம்
மனம் மகிழ்ந்து தீபம் ஏற்றுவோம்
சரணம்
இருள் அகல தீபம் ஏற்றுவோம்
இன்பம் பெறுக தீபம் ஏற்றுவோம்
இடர் களைய தீபம் ஏற்றுவோம்
இசை வளர தீபம் ஏற்றுவோம்
சரணம்
குன்றத்து முருகனுக்கு தீபம் ஏற்றுவோம்
குறைபோக்கும் பாலனுக்கு தீபம் ஏற்றுவோம்
குருவான முருகனுக்கு தீபம் ஏற்றுவோம் குறிஞ்சித் தலைவனுக்கு தீபம் ஏற்றுவோம்.