தாம் பிழை செய்ததாகக் கருதும் சமயங்களைக் குறிப்பிடுகிறான். நாம் இருவரும் சேர்ந்து நடந்து போகும்போதோ, படுக்கையில் படுத்திருக்கும் போதோ, மேல், கீழான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் போதும்…

உண்ணும் போதோ, நான் உங்களைப் பல தடவை அலட்சியமாக நடந்தி இருக்கிறேன் இப்படி தனிமையில் பிழை செய்திருந்தாலும்,

பலர் முன்னிலையில் செய்திருந்தாலும், அவையெல்லாம் மிகத் தவறு என்று இப்போது உணர்கிறேன். அந்த ஒவ்வொரு தவறுக்காகவும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்கிறான் அர்ச்சுனன்.

நீங்கள் என் பிழைகளைப் பொறுத்தருளக் கடமைப்பட்டவர். நீங்கள் இந்த அசைவனவும், அசையாதனமும் கொண்ட உலகத்திற்குத் தந்தையாகவும், எல்லோரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த குருவாகவும் போற்றத் தகுந்தவராகவும் இருக்கிறீர்கள்.

இணையற்ற மகிமை உடையவரே! மூவுலகிலும் எவரும் உங்களுக்கு நிகரானவர் கிடையாது. பின் உங்களிடம் மேம்பட்டவர் எவ்வாறு இருக்க முடியும். கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

“ஒப்பாரும், மிக்காரும், இல்லையாய மாமாயன்  நீங்கள். இந்த நிலையில் நீங்களே என் பிள்ளைகளைப் பொறுக்காவிட்டால் கருணை வடிவே! வேறு யார் பொறுப்பார்!” என்கிறான் அர்ச்சுனன்.

துடிக்கத்தக்க ஈஸ்வரனான உங்களை நான் என் உடலை உங்களுடைய சரணங்களின் நன்கு அர்ப்பணித்து வணங்குகிறேன். என்னிடம் மகிழ்ச்சி கொண்டவராக இருக்க வேண்டுகிறேன்.

“தெய்வமே! தந்தை தனயனுடைய குற்றங்களைப் பொறுப்பது போலவும், நண்பன் நண்பனுடைய குற்றங்களைப் பொறுப்பது போலவும், கணவன் தன் அன்புக்குரிய 
மனைவியினுடைய குற்றங்களைப் பொறுப்பது போலவும், என்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறான் அர்ச்சுனன்.

இதற்கு முன் நான் பார்த்திராத இந்த ஆச்சரியமான உருவத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டவனாக இருக்கிறேன். என்னுடைய மனம் பயத்தினால் மிகவும் நடுங்கிக் கொண்டு இருக்கிறது.

ஆகவே, நீங்கள் அந்த நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணு விஸ்வரூபத்தையே எனக்குக் காண்பியுங்கள். தேவ தேவனே, ஜகத்  நிவாசரே,  திருவருள் புரியுங்கள் என்கிறான். அர்ச்சுனன்.

Share.

Leave A Reply