பதினோரு ருத்திரர்களும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், எட்டு வசூக்களும், சாத்யர்களும், விஸ்வதேவர்களும்,இரண்டு அசுவினி குமாரர்களும், நாற்பத்தொன்பது மருந்துகளும்.
பித்ருக்களின் கூட்டங்களும், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் இவர்களின் கூட்டங்களும் ஆக அவர்கள் எல்லோருமே ஆச்சரியம் அடைந்தவர்களாய் உங்களைப் பார்க்கிறார்கள்.
நீண்ட தோள்களை உடையவரே! பல முகங்களும், கண்களும், பல கைகள், தொடைகள், திருவடிகளும், பல வயிறுகளும்.
பல கோரப் பற்கள் கொண்டும்.பயங்கரமான உங்களுடைய பெரிய உருவத்தைப் பார்த்து மக்கள் எல்லோரும் மிகவும் பயந்து நடுங்கி நிற்கிறார்கள். அவ்விதமே நானும் பயந்து நடுங்கி நிற்கிறேன். என்கிறான் அர்ச்சுனன்.
ஏனெனில், விஷ்ணுவே! வானளவிய பிரகாசமான பல வண்ணங்கள் கொண்டு மிக விரிந்த வாயும், ஒளிமிக்க அகன்ற கண்களும் உடைய உங்களைப் பார்த்து பயத்தினால் மிகவும் நடுங்கிய மனமுடைய நான் தைரியத்தையும், அமைதியையும்,
அடையவில்லை.
ஸ்ரீ மகா விஷ்ணுவான நீங்கள் பூமியின் பாரத்தை குறைப்பதற்காக
ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித் திருக்கிறீர்கள். என் நடுக்கத்தைத் தீர்ப்பதற்காக இந்த விஸ்வரூபத்தைச் சுருக்கிக் கொண்டு நீங்கள் விஷ்ணுவாகக் காட்சியளிக்க வேண்டும்.
கோரப் பற்களால் பயங்கரமானதும், பிரளய காலத்து தீ போன்றவையு மான உங்களுடைய திருமுகங்களைப் பார்த்து திசைகள் எது என்று புரியவில்லை.
மேலும், சுத்தையும் பெறவில்லை தேவ தேவனே உலக நிவாசனை! அருள் புரிய வேண்டும். உங்களுடைய பிரபாகத்தை நேரடியாகப் பார்த்து விட்டேன்.
ஆனால், இந்த விராட் விஸ்வரூபத்தைப் பார்த்த எனக்கு வருந்தத் தக்க நிலை வந்து விட்டது. என்னுடைய மகிழ்ச்சி, அமைதி, தைரியம் எல்லாம் போய்விட்டன.
நான் எங்கே நிற்கிறேன்? எங்கே பார்க்கின்றேன்? என்பதே தெரியவில்லை. தயை புரியுங்கள் நீங்கள் இந்த விராட் விஸ்வரூபத்தைச் சுருக்கிக் கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும்.
இப்போது என்னுடன் போர் செய்யத் தயாராக இருக்கும் துரியோதனன். முதலான திருதராஷ்டிர குமாரர்கள் அனைவரும் கூட உங்கள் வாயில் நுழைந்து அழிவதைப் பார்க்கிறேன்.
துரியோதனாதிகள் நூறு பேர்களில் ஒருவர் கூட மீதம் இன்றி அனைவரும் நுழைகிறார்கள் என்கிறான் அர்ச்சுனன்.
மேலும் திருதராஷ்டிருடைய புதல்வர்கள் மாத்திரம் உங்களுடைய முகத்தில் நுழைவதைப் பார்க்கவில்லை.
திருதராஷ்டிர குமாரர்களோடு கூட அவர்கள் கட்சியில் சேர்ந்து யுத்தம் செய்ய வந்திருக்கும் அரசர்கள் கூடக் கூட்டம் கூட்டமாக உங்கள் முகத்தில் நுழைகிறார்கள்.
