அற்புதமான ஒளிமிக்கதாக இருந்தால் சாதாரண மானுட கண்களுக்கு விழித்துப் பார்க்க இயலாது. அர்ச்சுனனுக்கு பகவான் கொடுத்த தெய்வீகப் பார்வையால்
ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தைப் பார்க்க முடிந்தது.
பகவானுடைய குணங்கள் பிரபாவம், சக்தி, சுயரூபம் இவற்றை எவரும் எந்த உபாயத்திலும் முழுமையாக அளந்து அறிந்து கொள்ள இயலாது என்று கூறுகிறார் அர்ச்சுனன்.
நீங்கள் அறியத் தக்க மிக உயர்ந்த அழிவற்ற பரபிரம்ம பரமாத்மா நீங்களே! இதில் அகில உலகத்திற்கும் மேலான உறைவிடம் நீங்களே! நிலையான தர்மத்தைக் காப்பாற்றுபவர் நீங்களே! அழிவற்றவரும் நீங்களே என்பது என்னுடைய கருத்து என்கிறான் அர்ச்சுனன்.
பரம்பொருளே! உங்களை முதல், நடு, முடிவு அற்றவராகவும், எல்லையற்ற தோள்கள் உடையவராகவும் இருக்கின்ற நீங்கள்…
சூரிய, சந்திரன் இவர்களைக் கண்களாகக் கொண்டவராகவும், கொழுந்து விட்டெரியும் தீ போன்ற வாய் உடையவராகவும், தம்முடைய வெப்பத்தினால் இந்த உலகத்தை வாட்டுபவராகவும் பார்க்கிறேன் என்கிறான் அர்ச்சுனன்.
பரமாத்மாவே! விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியும் எல்லா திசைகளும், உங்கள் ஒருவராகவே நிறைந்து இருக்கிறீர்கள்.
உலகியலுக்கு அப்பாற்பட்ட இந்த உங்களுடைய பயங்கரமான உருவத்தைப் பார்த்து மூன்று உலகங்களும் பயத்தால் மிகவும் நடுங்குகின்றன.
நான் தேவலோகம் சென்றிருந்தபோது எந்த தேவர்களைப் பார்த்தேனோ, அவர்களை இங்கே உங்கள் விராட் விஸ்வரூபத்தில் பார்க்கிறேன்.
பகவானுடைய பயங்கரமான விஸ்வரூபத்தில் எஞ்சியிருந்த பல தேவதைகள். உள்ளே நுழைவதை பார்த்த மற்ற தேவதைகள்.
“நான் மட்டும் இனி எத்தனை நேரம் தப்பி இருக்கப் போகிறோம்” என்று பயந்து கைகூப்பி உங்களுடைய திருநாமங்களையும், கல்யாண குணங்களையும் பாடுகிறார்கள்.
“உங்களைத் திருப்தி செய்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.”
ஆனால், தேவர்கள் தங்களை அறிந்ததால் மங்கலம் பொதிந்த பாடல்களைப் பாடுகிறார்கள்.
அவர்கள் உங்களைப் பற்றிய தத்துவங்களை அறிந்தவர்கள். ஆகவே, உங்களுடைய பயங்கரமான விஸ்வரூபத்தைப் பார்த்து பயப்படாத அவர்கள் மிகவும் அழகான கருத்துக்கள் நிரம்பிய துதிப் பாடல்களைப் பக்தியுடன் பாடி உலகமெங்கும் மங்கலம் உண்டாகட்டும் என்று அன்புடன் வேண்டித் துதிக்கிறார்கள் என்கிறான் அர்ச்சுனன்.
