பின் அர்ச்சுனனுக்கு காட்டிய தெய்வீக விஸ்வரூப காட்சியை வர்ணித்துக் கூறுகிறார் மிகப் பெரிய யோகிகள் கூட அத்தகைய ரூபத்தை காட்ட முடியாது. சாட்சாத் பரமாத்மா மட்டுமே காட்ட முடியும்.

தூய்மையானதும், எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்ததுமான உலயகிலுக்கு அப்பாற்பட்ட பொருளின் தனிச்சிறப்பை உணர்த்துவது ‘பரமம்’ என்ற சொல்.

ஈஸ்வரனுடைய குணங்கள், தெய்வீக சக்தியினால் உண்டான சுயரூபம், ஐஸ்வர்யம் ஆகும்.

தமக்கு பிரியமான பக்தனான அர்ச்சுனனுக்கு அருள் புரிந்து, தம் அற்புத பிரபாவத்தை உணர்த்துவதற்காகத் தம்முடைய அற்புத யோக சக்தியின்  மூலம் அந்த சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.

இக்கருத்துக்களைப் பலப்படுத்தவே ‘ரூபம்’ என்ற சொல்லுக்கு ‘பரமம்’ ‘ஐஸ்வர்யம்’ என்ற இரு அடைமொழிகளை கொடுக்கிறார் சஞ்சயன்.

பலவிதமான எண்ணற்ற முகங்களும், கண்களும் உடையவர் அர்ச்சுனன் பார்த்த பகவானுடைய விஸ்வரூபத்தில் முக்கியமான கண்கள் சந்திரனும், சூரியனும். ஆனால், உள்ளே எண்ணற்ற முகங்களும் நயனங்களும் காணப்பட்டன.

இதற்கு முன் காணக் கிடைக்காததும், விசித்திரமான வியப்பை அளிப்பதுமான காட்சி ‘அற்புத தரிசனம்’ எனப்படுகிறது.

பகவானுடைய ஆபரணங்கள் சிறப்புடையவை. ஒளிமயமானவை உலகியலில் காணக் கிடைக்காதவை. ஆகவே, தெய்வீகமானவை.

பல ஆபரணங்கள் அணிந்த எண்ணற்ற ஒளிமிக்க, தெய்வீக ஆபரணங்களோடு கூடி இருந்தது போருக்குரிய சாஸ்திரங்களுக்கு ஆயுதங்கள் என்று பெயர்.

எந்த ஆயுதங்கள் உலகியலுக்கு அப்பாற்பட்டு ஒளிமயமாக விளங்குகின்றனவோ,
அவற்றை தெய்வீகம் பொருந்தியவை என்கிறோம்.

விஷ்ணு பகவானின் சக்கரம், கதை,வில் இவ்விதமான எண்ணற்ற தெய்வீக சாஸ்திரங்களை பகவான் தம் திருக்கரங்களில் ஏந்தி இருக்கிறார்.

விஸ்வரூபம் எடுத்த பகவான் தம்முடைய கழுத்தில் மிகவும் அழகானதும், தேக மயமான உலகில் காணப்படாததுமான அபூர்வமான மாலைகளை அணிந்திருக்கிறார். ஒளிமிக்க, பலவிதமான ஆடைகளை அணிந்து அழகுற மிளிர்கிறார்.

அவர் பூசி இருப்பது சந்தனம் போன்ற வாசனை திரவியம் அல்ல. அது முற்றிலும் மாறுபட்ட தனிச் சிறப்பு வாய்ந்த தெய்வீக மணம் நிறைந்தது.

அதை நுகர்வதற்கே தெய்வீக நாசிகள் தேவை. அவர் உடல் முழுவதும் தெய்வீக மணம் மிகுந்த மனதைக் கவரும் திவ்யமான வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டிருந்தது.

பகவானுடைய விராட் விஸ்வரூபக் காட்சியில் முகம், கண்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், மாலைகள், ஆடைகள், சந்தனம் எல்லாமே வியப்பை அளித்தன.

Share.

Leave A Reply