முன்பு தங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது தங்கள் உபதேசத்தின் மூலம், தங்கள் குணங்கள் பிரபாவம், ஐஸ்வர்யம், ரகசியம், சுயரூபம் இவற்றைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டேன்.
ஸ்ரீ கிருஷ்ணன் தான் பரமாத்மா என்று புரிந்து கொண்டேன். என்னுடைய அறியாமை அழிந்ததற்கு தங்கள் உபதேசமே காரணம் என்று புரிந்து கொண்டேன் என்கிறான் அர்ச்சுனன்.
தாமரைக் கண்ணனே! உங்களிடம் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன. நீங்கள் அவற்றைக் காப்பாற்றுகிறீர்கள் அவை உங்களிடமே லயம் அடைகின்றன. இந்த விசயத்தை தாங்கள் பலமுறை சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
கேசவா! உயிரினங்களின் உற்பத்தி அழிவு பற்றி மட்டும் தான் உங்களிடம் கேட்டுக் கொண்டேன் என்பது பொருள் அன்று.
உங்களுடைய அழிவற்ற பெருமையையும் கேட்டறிந்தேன். அகில பிரபஞ்சத்தைப் படைத்தல்,காத்தல், ஒடுக்குதல் ஆகிய முத்தொழில் செய்தாலும் நீங்கள் கடவுள் இல்லை.
எல்லாவற்றையும் அடக்கி ஆண்டாலும், அவற்றால் பாதிக்கப்படாமல் ஒதுங்கி நின்று சாட்சியாக இருக்கிறீர்கள்.
எங்கும் நிறைந்து இருந்தாலும், உலகில் உள்ள பொருட்களின் சிறப்புகளிலும், குறைகளிலும் ஒட்டாதவர். நல்லதும், கெட்டதுமான சிறப்புகளிலும், குறைகளிலும் ஒட்டாதவர். நல்லதும், கெட்டதுமான கர்ம பலனுக்கு ஏற்றவாறு சுகம், துக்கம் என்ற பயன்களை அளித்தாலும்…
உங்களிடம் தயவின்மையோ, ஓரம் சார்வதோ கிடையாது. பிரகிருதியாகவும், காலமாகவும், லோக பாலகர்களாகவும் அடக்கி ஆள்பவர். சர்வ வல்லமை படைத்தவர்.
பரமேஸ்வரனே! நீங்கள் உங்களைப் பற்றி எவ்வாறு கூறினீர்களோ அது அப்படியே தான். ஆனால், புருசோத்தமா! உங்களுடைய ஞானம், ஈஸ்வரத் தன்மை, சக்தி, பலம், வீரியம், தேசஸ் இவற்றோடு கூடிய ஈஸ்வர சுய ரூபத்தை கண்கூடாகக் காண்பதற்கு விரும்புகிறேன்.
உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பரிபூரணமான நம்பிக்கை இருப்பதால்தான் காண வேண்டும் என ஆசைப் படுகிறேன் என்கிறான் அர்ச்சுனன்.
பிரபுவே! என்னால் அந்த ஈஸ்வர உருவத்தைப் பார்ப்பதற்கு முடியும் என்று நினைப்பீர்களே, ஆனால் யோகேஸ்வரரே! நீங்கள் உங்களுடைய அந்த அழிவற்ற விஸ்வரூபத்தை எனக்கு காட்டி தரிசனம் தாருங்கள்.
என் உள்ளத்தில் அந்த விஸ்வரூபத்தைக் காண வேண்டும் என்ற தீவிரமான ஆசை ஏற்பட வேண்டியது அவசியம்.
இந்த ஆசை உண்மையானதா, இல்லையா, தீவிரமானதா, இல்லையா,என்பதைத் தெரிந்து கொண்டால்தான் என்னுடைய ஆசை உண்மையானது என்று நீங்கள் கருதினால் தான், அந்த தரிசனம் பெற நான் தகுதி உள்ளவன் ஆவேன்.
நீங்கள் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் கற்பகதரு. நீங்கள் பக்தர்களின் விருப்பத்தைத் தான் கவனிப்பீர்கள். மற்ற தகுதிகளை அல்ல. நீங்கள் விரும்பினால் அந்த விஸ்வரூப தரிசனத்தை காட்டுங்கள் என வேண்டுகிறான் அர்ச்சுனன்.
