குருகுலத்தில் சிறந்தவனே அர்ச்சுனா! என்னுடைய விபூதிகள் தெய்வீகமானவை ஆகும். இப்பொழுது உனக்கு அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் கூறுகிறேன். என்னுடைய விரிவுக்கு முடிவு இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! நான் எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும், ஆத்மாவாக இருக்கிறேன். மேலும், உயிரினங்களுக்கு எல்லாம் ஆதியாகவும், நடுவராகவும், முடிவாகவும் நானே இருக்கிறேன்.
அதாவது,’ நானே ஆதி, நடு,முடிவு’ என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
அதிதியின் புதல்வர்கள் ஆன பன்னிருவர்களுள் நான் விஷ்ணுவாகவும், ஒளிர்பவைகளுள் கிரணங்களோடு கூடிய சூரியனாகவும், நாற்பத்தொன்பது வாயு தேவர்களுள் தேஜஸ் ஆகவும். நட்சத்திரங்களுள் அவற்றின் தலைவனான சந்திரனாகவும் இருக்கிறேன் என்கிறார்.
மேலும் கூறுகிறார், வேதங்களுள் சாம வேதமாக இருக்கிறேன். ஏன்என்றால்.. வேதங்களின் சாம வேதம் மிகவும் இனிமையான சங்கீத மயமானது.
பரமேஸ்வரனைப் பற்றிய அழகிய துதிகள் கொண்டது ஆகவே, வேதங்களுக்குள் சாம வேதத்திற்கு முக்கியத்துவம் உண்டு அதனால், பகவான்தம் ரூபமாக இருக்கிறேன் என்கிறார்.
தேவர்களிள் இந்திரனாக இருக்கிறேன், பொறிப் புலன்களுள் மனதாக இருக்கிறேன். உயிரினங்களுள் உணர்வாகவும், ஞான சக்தியாகவும் இருக்கிறேன்.
ருத்ரர்கள் பதினோருவருள் பரமசிவனாக இருக்கிறேன்.யட்சர், அரக்கர் இவர்களுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரனாக இருக்கிறேன்.
பசுக்கள் என் மருள் அக்கினியாகவும், சிகரங்கள் உள்ள மலைகளுள் மேரு மலையாகவும் இருக்கிறேன்.
பிரோகிதர்களுள் முக்கியமானவராகிய பிரகஸ்பதி ஆகவும், படைத்தலைவர்களுள் கந்தனாகவும், நீர் நிலைகளுள் கடலாகவும் இருக்கிறேன் என்கிறார்.
நான் மகரிஷிகளுள் பிருகு மகரிஷியாகவும், சொற்களுள் ஒரெழுத்தான ஓம்காரமாகவும் உள்ளேன். வேள்விகள் அனைத்துள்ளும் ஜபமாகிய யக்ஞமாகவும் இருக்கிறேன், அதாவது ஜபம் என்ற யக்ஞத்தில் சிறிது கூட இம்சை இல்லை ஜபம் என்பது பகவானை நேரில் கொண்டு வந்து நிறுத்துவது அதனால் நான் அதில் இருக்கிறேன்.
