பத்தாவது அத்தியாயம்
         விபூதி யோகம்

பகவானது விபூதிகளைப் பற்றிய வர்ணனை இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு விபூதி யோகம் என்ற பெயர்.

நீண்ட தோள்களை உடையவனே அர்ச்சுனா! மிகவும் அன்பு கொண்டவன் ஆன உனக்கு உன் நலம் கருதி நான் எதை மீண்டும் கூறுவேன் என்றால்…

என்னுடைய மிக உயரிய பொருள் பொதிந்த சொற்களைக் கேள் என்னுடைய சொற்களை அமுதம் போல் நினைத்து மிகுந்த ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் கேட்டுக் கொண்டு இருக்கிறாய்.

உன்னுடைய பிரியத்தால் என்னுடைய மனதில் உனக்கு உபதேசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

உனக்கு எது நன்மை பயக்குமோ அதை நான் சொல்கிறேன். என்னுடைய உற்பத்தியை லீலையாக வெளிப்படுவதை தேவ கணங்களும், முனிவர்களும் அறியார்கள்.

ஏன் என்றால் நான் எல்லா விதங்களிலும் எல்லாவற்றிற்கும் ஆதியாக இருப்பதால் அறிய மாட்டார்கள் என்கிறார்.

எவன் என்னைப் பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்கு எல்லாம் தலைவன் என்பதை தத்வரீதியாக அறிகிறானோ அவன் மனிதர்களில் மிகவும் அறிவாளியாகி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். பகவானுடைய வழிபாட்டிலேயே காலத்தை ஈடுபடுத்துவான்.

உலகில் பற்றுள்ள வர்களைப் போல போகங்கள்… சுகத்திற்குக் காரணம் என்று நினைத்து அவற்றில் ஈடுபட மாட்டான்.

ஆகவே, இப்பிறவியலும், முற்பிறவிகளிலும் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் அவன் முழுமையாக விடுபட்டு எளிதாகவே பகவானை அடைந்து விடுவான் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply