அரசர் வெட்கத்தினால் குன்றிப் போய்விட்டார். அவர் விநயத்துடன் சுதர்சன சக்கரத்தைத் துதித்தார்.

“என் உள்ளத்தில் துர்வாசரைப் பற்றி சிறிது கூட வெறுப்பு கிடையாது என்பது உண்மையானால், எல்லா பிராணிகளுக்கும் ஆத்மாவான பகவான் என்னிடம் கருணை காட்டுவதாக இருந்தால்…

ஏ சக்கரமே! நீங்கள் அமைதி அடைய வேண்டும். முனிவரை  சங்கடத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டினார்.

சுதர்சன சக்கரம் அடங்கிவிட்டது. பயம் என்ற தீயில் வெந்து கொண்டிருந்த துர்வாசரும் மனம் குளிர்ந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியும், நன்றி மலர்ந்தன.

அர்ச்சுனா! இந்த அருமையான மனிதப் பிறவியைப் பெற்ற நீர் எப்பொழுதும் இடைவிடாது என்னை பத்தி செய். கண நேரம் கூட என்னை மறவாதே என்கிறார் கிருஷ்ணன்.

மேலும், என்னிடமே மனம் நிலை பெற்ற உள்ளவனாக ஆகிவிடு. என் பக்தனாக மாறிவிடு என்னை பூசை செய்பவனாக இரு.

மனம், உடல், புலன் ஆகியவற்றை என்னிடமே புகலாகக் கொண்டு என்னையே அடைவாயாக என்கிறார்.

அர்ச்சுனா! சகுணம், நிர்குணம், உருவம் உள்ளது, உருவமற்றது என்று பல நிலைகளில் நான் இருக்கிறேன்.

விஷ்ணுவாக இருந்து உலகைக் காக்கிறேன்.  பிரம்ம தேவனாக இருந்து எல்லோரையும் படைக்கிறேன். ருத்ரனாக இருந்து எல்லாவற்றையும் தம்முள் ஒடுக்கிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு யுகங்களிலும் மச்சம், கூர்மம், வராகம்,
நரசிம்மம்,  ராமர், பலராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களை எடுக்கிறேன். 

உலகில் திருவிளையாடல்கள் புரியும் நான்! பக்தர்களின் விருப்பப்படி சுய ரூபக் காட்சி தருகிறேன். இப்படி எல்லாம் ஆக இருப்பதால் எல்லோருக்கும் தாயாக விளங்குகிறேன் என்கிறார்.

இப்படிப்பட்ட என்னிடம் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து விட்டு என்னையே புகலாக, கதியாக சரணம் அடைந்தவர்களுக்கு,

நான் என்னையே கொடுக்கிறேன். அவர்களுக்கு தரிசனம் கொடுத்து என்னுடனே வைத்துக் கொள்கிறேன். அவர்கள் என்னையே அடைகிறார்கள் என்பதில் சிறிதும் ஐயம் தேவையில்லை என்கிறார் கிருஷ்ணன்.       

ஒன்பதாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Share.

Leave A Reply