அர்ச்சனா! போதிய அளவு தூங்கினால் உடலில் களைப்பு அகலும் உடலில் புத்துணர்ச்சி உண்டாகும்.

அளவுக்கு அதிகமாக தூங்கினால் தாமோ குணம் தான் வளரும். சோம்பல் சூழ்ந்த சூழ்நிலையில் தியானம் செய்வது முடியாமல் போகும். பொன்னான காலம் வீணாகும்.

விழித்துக் கொண்டே இருந்தால் களைப்பு மேலிடும். ஒரு காலும் புத்துணர்ச்சி ஏற்படாது. உடல், புலன், பிராணன் சோர்ந்து போய்விடும்.

தியானம் யோகிக்கு உடல்நிலை சீராக இருக்க வேண்டும். தன் உடல்நிலை இயல்பு, சீர்மை, வயது இவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைக்கு அதிகமாகத் தூங்கக் கூடாது எப்போதும் விழித்திருக்கவும் கூடாது என விவரிக்கிறார் கிருஷ்ணர்.

அர்ச்சுனா! தூக்கத்தைப் போக்குகின்ற யோகம் அளவோடு உண்டு, நடமாடுகிறவனுக்கும், தர்மங்களின் உரிய முயற்சி செய்கின்றவனுக்கும்,
அளவோடு உறங்கி விழித்திருப்பவனுக்கு மட்டுமே கைகூடும்.

முற்றிலும் தன் வசப்படுத்தப்பட்டுள்ள உள்ளம் எப்பொழுது பரமாத்மாவிடமே நன்கு நிலை பெற்றிருக்கிறதோ அப்பொழுது அனைத்து போகங்களில் இருந்தும் பற்று நீங்கிய மனிதன்  யோகத்தில் முதிர்ந்த நிலை பெற்றவன் என்று அழைக்கப்படுகிறான்.

காற்று வீசாத இடத்தில் இருக்கும் விளக்கின் சுடர் எப்படி அசையாமல் இருக்குமோ, அதே உவமை பரமாத்மாவின் தியானத்தில் ஈடுபடுகின்ற யோகியின் உடைய அசையா நிலைக்கு ஒப்பிடலாம்.

யோகப் பயிற்சியினால் கட்டுண்ட சித்தம் எந்த நிலையில் ஓய்ந்து நிற்கிறதோ, அந்த நிலையில் பரமாத்மா தியானத்தால் தூய்மை பெற்ற நுண்ணிய புத்தியினால் பரமாத்மாவிடம் ஒருங்கே நிலைபெறும்.

புலன்களுக்கு அப்பாற்பட்ட தூய்மையான நுண்ணிய புத்திக்கு மட்டும் புலப்படும் முடிவற்ற ஆனந்தம் அனுபவிப்பான் எந்த நிலையிலும் பரமாத்மா சுயரூபத்தில் இருந்து விலக மாட்டான்.

மேலும், பரமாத்மாவை அடைவதாகிய பேற்றைப் பெற்றதும் அதைக் காட்டிலும் வேறொரு பேற்றை உயர்வாக கருத மாட்டான்.

பரமாத்மாவுடன் ஒன்றிவிட்டவன்  என் நிலையிலும் மிகப்பெரிய துயரத்தால் கூட கலங்க மாட்டான் என விவரிக்கிறார் கிருஷ்ணர்.

Share.

Leave A Reply