பில்வமங்களர் திரும்பி பார்த்தார். சீ! என்று தோன்றியது. பாவி கண்களே! நீங்கள் இருப்பதால்தானே எனக்கு வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறிக் கொண்டே வில்வமுட்களால் இரு விழிகளையும் குத்திக் கொண்டார்.
மனச்சஞ்சலத்திற்கு கண்களே காரணம் என்று கண்களை தண்டித்து விட்டார் ரத்தம் பெருகியது.
சிரித்துக்கொண்டே நர்த்தனார் ஆடிக்கொண்டு ஹரி நாமத்தைச் சொல்லத் தொடங்கினார். உள்ளத்தில் இருந்து சிறிது அழுக்கும் அகன்று விட்டது. பகவானை காண வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இருந்தது.
இக்காட்சியைக் கண்ட இருவருக்கும் வருத்தம் ஏற்பட்டது.
ஒளி இழந்த ஊனக் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக் கொண்டே இருந்தது.
ஸ்ரீ கிருஷ்ணனை பிரிந்து இருப்பதை எண்ணி,
கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!என்று கூவிக் கொண்டே எங்கே போகிறோம், எங்கே வருகிறோம், என்பது தெரியாமல் காடு, மலை, கிராமம், கிராமமாக அலைந்தார்.
கண்ணன் இடைச்சிறுவன் வேடம் கொண்டு பக்தனின் மனதைக் கொள்ளை கொள்ளும் தம் தேமதுரத் தீங்குரலால் அவரை அழைத்தார்.
“பெரியவரே! உங்களுக்கு பசியாய் இருக்கும் என்று கொஞ்சம் பட்சணம் கொண்டு வந்திருக்கிறேன். தண்ணீரும் கொண்டு வந்திருக்கிறேன் சாப்பிடுங்கள்” என்றார் கிருஷ்ணன்.
தேமதுர ஓசையைக் கேட்டதுமே துளிர்த்துவிட்டது வில்வ மங்களருக்கு கைகளில் சிறுவன் கொடுத்த இனிப்பு பண்டம் இருந்தது.
மெய் புல்லரித்து, “தம்பி! உன் வீடு எங்கே இருக்கிறது. உன் பெயர் என்னப்பா?” நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என கேட்டார்.
என் வீடு அருகில் இருக்கிறது. எனக்கு ஒரு குறிப்பிட்ட பெயரும் கிடையாது. யார் எப்படி கூப்பிட்டாலும் நான் ஓடி வருவேன்.
மாடு மேய்ப்பது தான் என் வேலை. என்னை யாரையாவது நேசித்தால், அவரை நானும் நேசிப்பேன் என்றான் சிறுவன்.
இனிமையான சொல் கேட்டு விம்மிதம் அடைந்தார் பில்வமங்களர்.
சிறுவனும் போய்க்கொண்டே இனி நான் தினமும் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வருகிறேன் என்று சொன்னான்.
“நல்லது தம்பி! தினம் வந்து கொண்டிரு” என்று அனுப்பினார்.
சிறுவன் போகும்போது அவர் உள்ளத்தை திருடிக் கொண்டு போய் விட்டான். தினந்தோறும் வந்து உணவு அளித்தான்.
தாம் எந்த பகவானைத் தேடிக் கொண்டு இருக்கிறோமோ, எவருக்காக துறவியாகத் திரிந்து கொண்டிருக்கிறோமோ, யாருக்காக ஊனக் கண்களை அவித்துக் கொண்டோமோ அவர் தான் இந்த ஆயர் சிறுவன் என்பது புரியவில்லை பில்வமங்களருக்கு
ஆனால், அச்சிறுவன் அவர் உள்ளத்தை முழுமையாக ஆட்கொண்டு விட்டான். “எத்தனையோ இடையூறுகளைக் களைந்து விட்டு இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். இங்கு புதிய இடையூறு முளைத்து விட்டதே!
பெண் மோகத்தில் இருந்து மீண்டு விட்ட எனக்கு இச்சிறுவன் பால் மோகம் வந்துவிட்டது என எண்ணினார்.
