அப்போது அங்கு வந்த சிறுவன் பெரியவரே! என்ன நினைக்கிறீர்கள் பிருந்தாவனம் போக வேண்டுமா? என்றான்.

பிருந்தாவனம் என்ற சொல்லைக் கேட்டதுமே, பெரியவருக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது அடுத்த கனமே தன் இயலாமை அவரை ஏங்க வைத்தது.

சிறுவா இக்குருடன் எப்படிப் போவேன். என்றார், வருத்தம் கலந்த குரலில்.

பெரியவரே! இந்தத் தடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் அழைத்துப்  போகிறேன் என்று சிறுவன் சொன்னான்.

பில்வமங்களருக்கு உள்ளம் மலர்ந்தது. அந்தத் தடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

கல்லையும், முள்ளையும் விலக்கி, இப்படி வாருங்கள், இங்கே திரும்புங்கள், காலைத் தூக்கி வையுங்கள். என்று இனிமையாகச் சொல்லிக் கொண்டே பக்தனை அழைத்துச் சென்றார் பகவான்.

என்ன கருணை எத்தனை தயாள குணம் ஐயா! இதோ பிருந்தாவனம் வந்து விட்டது நான் போகிறேன் என்றான் சிறுவன்.

உடனே, தடியை விட்டு விட்டுப் பையனுடைய கையை சிக்கெனப் பிடித்துக் கொண்டு விட்டார் பில்வமங்களர்.

சிறுவன் கையைத் தொட்டதுமே உடலில் மின்னல் போன்ற உணர்வு பாய்ந்தது. இருள் மறைந்தது. எங்கும் ஒரே வெளிச்சம் பில்வ மங்களருக்கு தெய்வீகப் பார்வை வந்துவிட்டது.

சிறுவனின் வடிவில் பகவான் கிருஷ்ணனின் வடிவத்தை கண்டு கொண்டார். மெய்சிலிர்த்தார். கண்களில் இருந்து நீர் அருவியைய் கொட்டியது.

பகவானுடைய கைகளை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். பிரபு இவ்வளவு நாட்கள் கழித்து இன்றாவது கண்டு கொண்டேனே

எவ்வளவு அறிவிலி நான்! இனி என்னை விட்டு விடாதே! இனி என்னை விட்டு விடாதே என்றார். கிருஷ்ணா! நீ என்னை விட மாட்டாயே! என்றார் பில்வ மங்களர்.

ஒரு காலும் உம்மை விடமாட்டேன். விடவே மாட்டேன் என்றவர் வெடிக்கென்று அவருடைய பிடியில் இருந்து தம் கையை விடுவித்துக் கொண்டார்.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கிற பலத்தின் எதிரே அப்பாவி பில்வ மங்களரின்  கைப்பிடிக்கு ஏது பலம்!

ஆனால், பில்வமங்களர் வேறு ஒரு கயிற்றினால் பகவானைப் பிடித்துக் கட்டிப் போட்டு விட்டார்.

கையை உதறிவிட்டுப் போன கண்ணனைக் கூவி அழைத்தார். “அடே சிறுவா! ஓடியா போகிறாய் நினைவில் வைத்துக்கொள்.”

என் கையைத் தட்டி விட்டு ஓடி விட்டாய். இதில் என்ன ஆச்சரியம், என் உள்ளத்தில் இருந்து ஓடு பார்க்கலாம். உன் திறமையை மெச்சுகிறேன் என்றார் பில்வமங்களர்.

தீய நடத்திய உள்ளவராகத்தான் இருந்தார். ஆனால், பக்தன் ஆகிவிட்டார். வீழ்ச்சியை தரக்கூடிய காரணம், கண் முன் வந்த போதும் தப்பிவிட்டார். முடிவில் பகவானையே அடைந்து விட்டார்.

பிருந்தாவனத்தைச் சென்றடைந்ததுமே இனிமையான வாக்கில் தோன்றியதுதான்
“ஸ்ரீ கிருஷ்ண கர்ணா மருதம்”

அதன் முதல் சுலோகத்தில் சிந்தாமணியை தமது குரு என்று கூறி அவருக்கு வணக்கத்தை தெரிவித்திருக்கிறார்.

சோமகிரியும் வாழ்க தலையில் மயில்பீலி சூடி  எனக்கு வழிகாட்டிய
ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்க! பக்தர்களின்  விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடியாகிய கற்பகத் தருவின் தளிர்களில் விளையாடும் விஜயலட்சுமி பக்தனைச் சேர்த்துக் கொண்டு விட்டாம் என்று மகிழ்ச்சியாள்.

மேலும், விவரிக்கிறார்… அர்ச்சுனா! பெண்கள், சண்டாளர், கீழ் சாதியினர் என்போரும் என்னை தஞ்சம் அடைந்து மேலான பெரும் பேரான  மோட்சத்தை அடைகிறார்கள். 

முற்பிறவி பாவங்களின் காரணமாகவே அவ்வாறு சண்டாளர்களாகவும், கீழ்குடி மக்களாகவும் பிறக்கிறார்கள்.

இவர்களைத் தவிர வேடர்கள், மலை சாதியினரும், மிலோசகர்கள் இவர்களையும் கூறலாம். பக்தி செய்வதற்கு சாதி தடை கிடையாது.

தூய்மையான அன்பே அதற்குத் தேவைப்படுகிறது. முற்காலத்திலும், தற்காலத்திலும் மகாத்மாக்களான இறையடியார்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் வேடுவ குலத்தில் பிறந்த குகன் பற்றி பார்ப்போம்.

Share.

Leave A Reply