திரௌபதி
திரௌபதியின் அழைப்பை ஏற்று பாண்டவர்களுக்கு நற்பெயர் ஏற்படுத்திய சம்பவமும் உண்டு.
பாண்டவர்கள் வனத்தில் துன்பமயமான நாட்களை கழித்துக் கொண்டிருந்தார்கள்.
பாண்டவர்களுக்கு தீங்கு செய்ய நினைத்த துரியோதனன், துர்வாச முனிவரை அழைத்து நன்கு உபசரித்தான். அவர் மகிழ்ந்திருந்த சமயம் இவ்வாறு வேண்டினான்.
தாங்கள் ஒரு நாள் பாண்டவர்கள் வசிக்கும் வனத்திற்கு தாங்கள் பதினாயிரம் சீடருடன் செல்ல வேண்டும்.
எல்லோரும் பகல் உணவு உண்ட பின் திரௌபதியும் உண்டு ஓய்வில் இருக்கும் நேரத்தில் விருந்துக்குச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
திரௌபதி சாப்பிட்டு முடித்து விட்டாள் என்றால் சூரிய தேவனால் அளிக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்து அன்னம் மீண்டும் கிடைக்காது.
அதனால், சீற்றமே இயல்பாக கொண்ட துர்வாசர் பாண்டவர்களைச் சபித்து சாம்பல் ஆக்கிவிடுவார். எமது காரியம் எளிதாகிவிடும் என துரியோதனன் எண்ணினான்.
நேர்மையான உள்ளம் படைத்த துர்வாசருக்கு இந்த சூது தெரியவில்லை. ஆயினும் அவர் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
வனத்தில் திரௌபதி உட்பட அனைவரும் உண்ட பின் பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்த சமயம் பதினாயிரம் சீடர்களுடன் துர்வாச முனிவர் வந்தார். பாண்டவர்கள் எழுந்து அவர்களை உபசரித்து உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.
துர்வாசரும் அந்த வேண்டுகோளை ஏற்றவர், நீராடி விட்டு வருவதாகச் சொல்லி நதிக்கரைக்குச் சென்றார்.
திரௌபதிக்கு கவலை ஏற்பட்டது. இன்று இப்பாத்திரத்தில் இருந்து உணவு வராது. இவர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பது.
கிருஷ்ணா உன்னைத் தவிர வேறு யார் உதவி செய்ய முடியும் என மனமார வேண்டினாள். நீ தான் காப்பாற்ற வேண்டும்.
முன்பு கௌரவ சபையில் துச்சாதனன் பிடியில் இருந்து என்னை மீட்டுத் தந்த தாங்கள், இப்போதும் நீங்கள் தான் காக்க வேண்டும் என வணங்கி உருகினாள்.
திரௌபதியின் சங்கடத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணன். ருக்மணியின் வீட்டில் இருந்த கிருஷ்ணனுக்கு தனது பக்தையின் அழைப்பு காதில் விழுந்தது.
திரௌபதியின் சங்கடத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணன். ருக்மணியை விட்டு எழுந்து
திரௌபதி இருக்கும் வனத்திற்கு ஓடோடி வந்தார்.
பரம்பொருள் கிருஷ்ணன் வர தாமதம் ஆகுமோ! உடனே திரௌவுபதியின் முன் வந்தார்.
கிருஷ்ணனைப் பார்த்த திரௌபதிக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. வணங்கியவள் நடந்தவற்றைக் கூறினாள்.
“அதெல்லாம் பின்பு பேசிக் கொள்ளலாம் எனக்கு மிகவும் பசிக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது உடனே எனக்கு கொடு” என்றார் கிருஷ்ணன்.
“உணவுச் சிக்கலில் சிக்கிக் கொண்டு தானே, உங்களை நினைத்தேன். நான் சாப்பிட்டாகி விட்டதே! பாத்திரத்தில் ஒன்றும் இல்லையே” என்றாள் திரௌபதி.
நெடுக நடந்து வந்ததால் என்னைப் பசி வாட்டுகிறது. இது விளையாடுகிற
நேரமன்று உடனே போ பாத்திரத்தை எடுத்து வா “என்னிடம் காண்பி” என்றார் கிருஷ்ணன்.
பாத்திரத்தைக் கொண்டு வந்து கிருஷ்ணன் முன் வைத்தாள் திரௌபதி.
