கேசவா! பக்தி சாதனைகளுக்கு உரிய யோக சேமத்தை நான் தாங்கள் நிர்வகிக்கிறீர்கள் என்பது சரியே, நடைமுறை வாழ்க்கையின் நிர்வாகத்தையும் செய்கிறீர்களா? எனக் கேட்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! தாயையே பற்றிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைக்கு தாயாரை மட்டும்தான் தெரியும்.

தன் பொருட்களைக் காப்பாற்றும் வழியும் தெரியாது, தேவைப்படும் பொழுது அவற்றைப் பயன்படுத்தவும் தெரியாது, கவலைப்படுவதும் இல்லை.

தாயார்தான் குழந்தைக்கு உரிய அத்தனைப் பொருட்களையும் சேர்த்து காப்பாற்றி எப்பொழுது எது குழந்தைக்கு தேவைப்படும் என்று கவனித்து அப்பொருளைத் தேடிக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

இவ்விதம் தன்னிடம் பிரியம் பூண்ட  பக்தனுடைய வாழ்க்கையில் உலகியல் வாழ்வுக்கே பகவான் உடைய உபாசனைக்கோ தேவையான பொருட்களை பகவானே நிர்ணயிக்கிறார்.

அவற்றைக் கொண்டு சேர்க்கிறார், சேர்த்தவற்றை காப்பாற்றியும் கொடுக்கிறார், அதில் உலகியல், ஆன்மீகம் என்றெல்லாம் எவ்விதப் பாகுபாடும் கிடையாது.

பக்தனுடைய உண்மையான நலன் பெருகும் வகையில் அதை காக்கும் வகையிலும் இடையூறு நேருமோ, அந்த நன்மைக்கு உரிய பொருட்களைச் சேர்ப்பதும், காப்பதும் தான் உண்மையான யோக சேமம் என்கிறார் கிருஷ்ணன். 

வேறு எதிலும் நாட்டம் கொள்ளாமல் என்னையே நினைத்துக் கொண்டிருக்கின்ற பக்தி உள்ளவனுடைய உண்மையான நலனையும் உண்மையான யோக சேமத்தின் பாரத்தையும் சுமக்கிறேன். 

அவனுடைய நலத்திற்கு ஏற்புடைய எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் காப்பது என்ற குறிக்கோளுடன் பகவான் தாமே உலகியல் பொருட்களையும், சேர்த்து காப்பது என்ற
குறிக்கோளுடன் உரியவை  ஆயினும் அவற்றைத் தேடித் தந்து காப்பாற்றித் தருகிறேன்.

அதாவது, என்னையே புகழாகக் கொண்டு வேறு சிந்தனை இன்றி பகவானையே இடைவிடாது சிந்தனை செய்து கொண்டு எல்லாக் கடமைகளையும் ஆற்றுகிறானோ, வேறு எந்த விசயத்திலும் ஆசையோ, பற்றோ, தேவையோ கொள்வதில்லையோ அவனுடைய வாழ்க்கையை நிர்வகிக்கும் எல்லாப் பொறுப்பும் என்னிடம் உள்ளது.

சர்வ வல்லமை படைத்த நான் எல்லாம் அறிந்தவன், கவனிப்பவன். எனவே, ஊற்ற நண்பனாக பக்தனுடைய யோக சேமத்தையும் நடந்துக்கிறேன். அதில் ஒருபோதும் தவறு ஏற்படாது

என்னால் கொடுக்கப்படும் யோக சேமம் மிகுந்த சுகத்தையும், அமைதியையும், அன்பையும், ஆனந்த கூத்தையும் அளிக்க வல்லது. பக்தனை வெகு விரைவில் என்னிடம் சேர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.

இங்கு யோகம் என்றால் என்னை சேர்வது. சேமம் என்றால் அதற்குரிய சாதனைகளைக் காப்பது ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! பயனை எதிர்பார்ப்பவர்கள் ஆன எந்தப் பக்தர்களும் சிரத்தையோடு கூடியவர்களாக இருந்த போதிலும் மற்ற தேவதைகளை வழிபடுகிறார்கள் அவர்களும் என்னையே வழிபடுகிறார்கள்.

ஆனால், அவர்களுடைய வழிபாடு விதிமுறைப்படி உள்ளது அன்று அதாவது அஞ்ஞானம் நிறைந்த தாகும்.     

Share.

Leave A Reply