கேசவா! உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் கூறுபவர்களைப் பற்றி விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் தீர்மானம், நம்பிக்கை, ஆராய்ச்சி, கட்டுப்பாடுகள் எல்லாமே உறுதியாக இருக்கும்.
பெரிய பெரிய விபத்துக்களோ, இடையூறுகளோ கூட அவர்களை தங்களுடைய சாதனையில் இருந்தோ எண்ணத்தில் இருந்தோ தளரச் செய்ய முடியாது என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! இடைவிடாது உபாசனை செய்வது பற்றி விவரியுங்கள் எங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பகவானிடம் பிரியம் மிகுந்த பக்தர்கள் ஒரு சமயம் கீர்த்தனம் செய்வார்கள். இன்னொரு சமயம் வணங்குவார்கள், இல்லையேல் சேவை செய்வார்கள். ஆக மொத்தத்தில் பகவானை சிந்தித்துக் கொண்டே இடைவிடாது உபாசனை செய்வார்கள் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! வேறு சில ஞான யோகிகள் நிர்குணமான உருவமற்ற பிரம்மமான என்னை ஞான அஞ்ஞானத்தினால் தான் வேறு என்ற எண்ணம் இல்லாமல் ஒன்றிய பாவத்தோடு வழிபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மற்றும் சிலர் பல தோற்றங்களில் விளங்கும் விராட் சுயரூபமான பரமேஸ்வரன் ஆன என்னைத் தன்னிலும் வேறாக எண்ணியும் வழிபடுகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! பகவானை திரும்பத் திரும்ப வணங்குதல் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! திருக்கோயில்களுக்குச் சென்று சிரத்தை உடனும், பக்தியுடனும், பகவானே வணங்குவது உடல் முழுவதும் நிலம் தேய சாஷ்டாங்கமாக வணங்குவது.
தன்னுடைய வீட்டிலேயே பகவானுடைய திருவுருவம், படங்கள் இவற்றை வைத்து வழிபடுவது, பூஜைகள் செய்து இறைவன் புகழ் பாடும் நூல்களைப் படிப்பது, பாடுவது, மனம், சொல், உடலினால் வணங்குவது இவைகள் எல்லாம் இறைவனைத் திரும்பத் திரும்ப வணங்குவதாகும்
கேசவா எப்போதும் பகவானையே நினைப்பது என்பது பற்றி விபரீயங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும், எழுந்தாலும், உறங்கினாலும், விழித்து இருந்தாலும், வேறு என்ன செயல் செய்தாலும்…
அவற்றின் இடையேயும் தனிமையில் உட்கார்ந்து தியானம் செய்யும் போதும், எப்பொழுதும் இடைவிடாது பகவானையே சிந்தித்திருப்பது பகவானை எப்போதும் நினைப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! தேவதைகளையும்,
பித்ருக்களையும், உபதேசித்து செய்யப்படுகின்ற கர்மங்கள் அனைத்தும் நான்தான்.
யாகத்தில் பயன் படுத்தப்படுகின்ற நெய், தானியங்கள், நோய் தீர்க்கக்கூடிய பலவிதமான மூலிகைகள் அனைத்துமே நான்தான்.
மந்திரங்களும், ஜெபங்களும், அக்கினியும் நானே தான் இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், கர்மங்களுக்குப் பயன் அளிப்பவனும் நானே தான்.
தந்தையும், தாயும், பாட்டனாரும், அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓம்காரமும், ருக், யஜுர், சாம, என்ற மூன்று வேதங்களும் நானே தான்.
