கேசவா!அவை என்னை கட்டுப்படுத்துவதில்லை என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

மற்றவர்களுக்கும் பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துயரம், சுகம்,துக்கம் என்று அபிமானம் இல்லாமல் பயனில் கருத்து இல்லாமல் கடமையை ஆற்றுகிறானோ அவன் சிரமமின்றி எளிதாகவே இயல்பாக கர்ம பந்தத்தில் இருந்து விடுபடுவான் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! தலைவனான என் கண்காணிப்பில் பிரகிருதியானது அசைவன, ஆசையாதன இவற்றோடு கூடிய உலகம் அனைத்தையும் தோற்றுவிக்கிறது. இந்த காரணத்தினால் இந்த சம்சார சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது என்கிறார்.

கேசவா! பகவானுடைய தலைமையில் பிரகிருதி எவ்விதம் சராசரமனைத்தையும் படைக்கிறது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். 

அர்ச்சுனா விவசாயி தான் தலைவனாக இருந்து கொண்டு பூமியில் விதைகளை ஊன்றச் செய்கிறான்.

பூமிக்கும் விதைக்கும் உறவு உண்டாக்குகிறான். பிறகு அந்த விதைகளின் தன்மைக்கு ஏற்றவாறு விதவிதமான செடிகளை முளைக்கச் செய்கிறான்.

அதுபோல, பகவான் தம் தலைமையில் சேதன வர்க்கம் என்ற விதையை படைத்து பூமியுடன் சம்பந்தப்படுத்துகிறார்.

இவ்விதம் ஜடப் பொருளையும், மனிதன் போன்ற உயிர் பிறவிகளையும் அண்ட சராசரங்களையும் அவற்றின் கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு பிறவிகளில் பிறக்கச் செய்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! என் தலைமை செயல்பாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தினுடைய படைத்தல், காத்தல் அழித்தல் முதலிய எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன என்கிறார் கிருஷ்ணன்.

என்னுடைய மேலான இயல்பை அறியாதவர்களான அறிவிலிகள் மனிதனுடைய உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு எல்லாம் தலைவனான என்னை அற்பமாக நினைக்கிறார்கள்,
அவமதிக்கிறார்கள்.

வீணான ஆசை உடையவர்களும், பயனற்ற செயல்களைச் செய்பவர்களும், வீணான அறிவு உடையவர்களுமான…

தத்துவ ஞானம் இல்லாத உறுதியற்ற மனம் உடைய அறிவிலிகள். அரக்கத் தன்மையையும், அசுரத் தன்மையையும் மோகத்திற்கு வசப்பட்டுத் துன்புறுத்துவது ஆகிய  இயல்பையே  சார்ந்துள்ளார்கள்.

உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்து கொண்டு….

திரும்பத் திரும்ப வணங்கிக் கொண்டும் எப்பொழுதும் என்னையே நினைத்து தியானத்திலேயே நிலைத்து வேறு ஒன்றும் நாட்டம் இல்லாது அன்பு கொண்டு வழிபடுகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.  

Share.

Leave A Reply