கேசவா! ‘பவித்ரம்’ என்றும் ‘உத்தமம்’ என்றும் கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
நம்பிக்கையுடன் கேட்டுச் சிந்தித்து அதன்படி நடப்பவர்களுடைய அனைத்துப் பாவங்களையும், தீய குணங்களையும் அடியோடு அழித்து…
அவர்களை எக்காலத்திலும் பரிசுத்தமாக வைத்திருக்கக் கூடியது இந்த உபதேசம். இதுவே ‘பவித்திர’ மானதாகும்.
உலகில் உள்ள சிறந்த பொருட்கள் அனைத்திலும் சிறந்தது. ஆகவே, இது ‘உத்தம’மானது என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், இவற்றில் எவ்வளவுக் எவ்வளவு இதில் முன்னேறுகிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு தீய குணங்கள், தீய நடத்தைகள், துக்கங்கள் எல்லாம் நாசம் அடைந்துவிடும்.
அவனுக்கு பரம சாந்தியும், சுகமும், நேரிடையான அனுபவத்திற்கு வரும் ஞானத்தை முழுமையாக அடையப் பெற்ற உடனே, பகவானை அடைந்து விட முடியும்.
எத்தனை விதமான கடமைகள் சொல்லப் பட்டிருக்கின்றனவோ, அவற்றிற்கு முரண் பாடமல் இயல்பாகவே தர்மமாக இருப்பதால்… எல்லாவற்றிற்கும் சிறந்தது ‘தர்மயம்’ எனப்படும் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! கடைபிடிப்பதற்கு வேண்டியது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா!பயனில் கருத்துடன் செய்யப்படும் கர்மங்கள் பயனை அளித்துவிட்டு அழிந்து விடுகின்றன.
உலகியல் படிப்பும் ஒரு தடவை படித்த பிறகு திரும்பத் திரும்ப பயிலா விட்டால் மறந்து போய்விடும்.
ஆனால், பகவானேப் பற்றிய ஞானமும், விஞ்ஞானமும் அது போல அழிவதில்லை. மறந்து போய் விடுவதும் இல்லை.
ஒரு மனிதன் ஒரு தடவை நல்ல முறையில் கற்றுத் தேர்ந்து விட்டான் என்றால் பிறகு எந்த நிலையிலும், எப்பொழுது மாறமாட்டான்.
இதனால் அடையப் பெறும் பயனும் அழியாது. இதுவே, ‘அபயம்’ எனப்படுகிறது.
இது இவ்வளவு பெரிய விசயம் ஆயிற்றே! இதற்கேற்றவாறு நடத்தை யை கைக்கொண்டு இதை அடைவது மிகவும் கடினமாக இருக்குமோ? என்று யாரும் பின்வாங்க வேண்டாம்.
பகவானிடம் சரணாகதி அடைவது மிகவும் எளிது. ஏனெனில் இதற்கு வேறு வெளி ஏற்பாடு ஒன்றும் தேவையில்லை. வருத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை.
முற்றிலும் முடிந்த பிறகு தான் பயன் தரும் என்று நினைக்க வேண்டாம். இந்த சாதனை ஆரம்பித்த உடனேயே சாதகனுக்கு சாந்தியும், சுகமான அனுபவத்தில் வரத் தொடங்கும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! தர்மத்தின் உடைய சிறப்பில் நம்பிக்கை அற்ற மனிதர்கள் என்னை அடையாமல் மரண வடிவான சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறான் கிருஷ்ணன்.
