ஆத்ம சம்பந்த யோகம்
6- அத்தியாயம்
கேசவா ‘யுக்த’ என்ற விழிப்புணர்வோடு கூடிய யோகியைப் பற்றிக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சனன்.
அர்ச்சனா! தியானம் செய்யும் போது சாதகன் தூக்கம், சோம்பல், கவனமின்மை முதலிய இடையூறுகளில் இருந்து தப்பித்து நன்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொஞ்சம் அயர்ந்தாலும் மனமும்,புலன்களும் அவனை ஏமாற்றி தியானத்தில் பலவிதத் தடங்கல்களை ஏற்படுத்திவிடும். இதைத் தான் ‘யுக்த’ என்று கூறுவார்கள்.
அதாவது, விழிப்புணர்வோடு கூடிய யோகி என்ற சொல் குறிக்கிறது. என்றவர் மனதை அடக்குவது பற்றியும் விவரிக்கிறார்.
அர்ச்சனா ஒரு விசயத்திலும் நிலை கொள்ளாமல் பல முறை தடுத்தும் கூட முரட்டுத்தனமாக இருப்பதும் பல விசயங்களில் அலைபாய்வதுமே மனதின் இயல்பு.
இந்த மனதை நன்றாகத் தடுத்து நிறுத்தா விட்டால் தியானயோக சாதனை புரிய முடியாது. ஆகவே, தியானம் செய்யும் போது மனதை வெளிப்பொருட்களில் இருந்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
தன்னுடைய இலட்சியத்தில் முழுமையாகக் கொண்டு வந்து பகவானிடம் தன்மயம் ஆகி விடுவது தான் மனதை அடக்குவதாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
கேசவா ‘மச்சித்த’ என்பதன் பொருளை கூறி விவரிங்கள் என்கிறான் அர்ஜுனன்.
அர்ச்சனா! சித்தம் ஒருங்கே தியானிக்கப்படும் பொருளை நோக்கி முழுமையாக இழைவது தான் தியானம் ஆகும்.
மனம் எந்தப் பொருளில் பிரியம் கொண்டிருக்கிறதோ அந்தப் பொருளில் இயல்பாக இணைந்து கொள்ளும். எனவே, பகவானிடம் உள்ளத்தைக் கொடுக்க வேண்டும்.
அவன் உற்ற நண்பனாக நன்மையைச் செய்பவன் என உணர்ந்து பிற பற்றை ஒழித்து பகவானையே தியானப் பொருளாக கொண்டு….
வேறு நினைவின்றி சித்தத்தை பகவானிடமே நிலை நிறுத்துகின்ற தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணர்.
தொடரும்
