ஒன்பதாவது அத்தியாயம் ராஜ வித்தை ராஜ ரகசிய யோகம்
இந்த ஒன்பதாவது அத்தியாயத்தில் இதற்கு முன் செய்த உபதேசம் எல்லாவற்றிலும் தலைசிறந்தது. மறைத்து போற்றப்பட வேண்டிய ரகசியங்களிலும் தலை சிறந்தது. ஆகவே, இந்த அத்தியாயத்திற்கு ராஜ வித்தை ராஜ ரகசிய யோகம் என்று பெயர்.
அர்ச்சுனா! எதை அறிந்து கொண்டதாலேயே துக்க வடிவான உலகியலில் இருந்து விடுதலை பெறுவாயோ!
மிகவும் மறைத்து போற்ற வேண்டிய விஞ்ஞானத்தோடு இந்த ஞானத்தை குற்றம்,குறை காணாத இயல்புடைய பக்தனான உனக்கு மறுபடியும் நன்றாக விளக்கிக் கூறப் போகிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! ‘அநஸீயு’ என்று என்னை அழைத்ததன் காரணத்தை விளக்குங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பண்புள்ளவர்களின் பண்பை மதியாமை, குணங்களில் குற்றம் காண்பது, அவர்களை நிந்திப்பது, அவர்களின் மீது பொய்யான பொல்லாங்கு கூறுவது இவையெல்லாம் ‘அநஸீயு ‘ஆகும்.
இயல்பாகவே இக்குணங்கள் இல்லாதவனை ‘அநஸீயு’ என்றேன்.
எவனுக்கு என்னிடம் நம்பிக்கை உள்ளதோ, பற்று கிடையாதோ அவன் தான் இந்த அத்தியாயத்தில் கூறப்படும் உபதேசத்தை பெறக்கூடிய தகுதி உள்ளவன்.
இதற்கு மாறாக என்னிடம் குற்றம் காண்பவனும் சிரத்தை இல்லாதவனும் இந்த உபதேசம் பெறத் தகுதியற்றவன். என்னிடம் குற்றம் காண்பவனுக்கு இந்த கீதாசாஸ்திரத்தைச் சொல்லக்கூடாது எனத் தெளிவாக கூறுகிறார் கிருஷ்ணர்.
