கேசவா! அவரை அடைவது என்று சொல்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எப்பொழுதும் அழிவற்றதான அவருடைய நித்யதர்மத்தை சத்யலோகம், பரமதாமம், சாகேதலோகம், கோலோகம், வைகுண்டலோகம், பிரம்மலோகம் ஆகும்.

இங்கு சென்று பகவானை நேரடியாக தரிசனம் செய்வதுதான் அவரை அடைவது. இந்த பிரம்மலோகம் திரும்பி வரும் தன்னை உடையது அன்று.

கர்மங்களை செய்கின்ற யோகி இறந்தபின் தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டு சந்திரனுடைய ஒளியை அடைந்து, சொர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்து விட்டு திரும்பி வருகிறார்.

கேசவா! திரும்பி வருவது என்பதன் பொருளை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். 

அர்ச்சுனா!  குறிப்பிட்ட காலம் வரை அங்கே தங்கிப் பிறகு மனித உலகம் திரும்புவது தான் ‘திரும்புவது’ என்பதற்குப் பொருளாகும்.

கர்மங்களின் பயனாக சொர்கமும், அங்குள்ள போகங்களும் கிடைத்தபின், அவை முடிந்தவுடன் அதாவது குறைந்தவுடன் அந்த உயிர் கட்டாயமாக அங்கிருந்து திரும்பிவர நேர்கிறது.

சந்திரலேகத்தில் இருந்து ஆகாயத்தை அடைந்து, வாயுரூபமாக மாறி பின் புகையாக மாறுகிறது. புகை, மேகத்துடன் சேர்கிறது பிறகு நீராக பூமியில் பொழிகிறது.

அங்கே, கோதுமை, சோளம், எள்,நெல் முதலிய விதைகளிலோ, மரங்களின் விதைகளிலோ சேர்கிறது.

அதன் வழியாக அந்த உயிர் ஆண் மக்களிடம் சேர்கிறது. அவன் வழியாக பெண்ணை அடைந்து தன்னுடைய கர்மத்திற்கு ஏற்றவாறு உடல் பெற்று பிறக்கிறான் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! சுக்ல, கிருஷ்ண என்ற தேவயானம், பித்ரு யானம்  எனப்படும் இரண்டு வழிகள் உலகிற்கு என்றும் உள்ளனவாகக் கருதப்படுகின்றன.

இவற்றுள் அர்ச்சிர் மார்க்கம்  திரும்பி வராத பரமகதியே அடைகிறான். மற்றொரு வழியாக செல்கிறவன் தூம மார்க்கம் ஆகிய பற்றுடன் கர்மம் செய்து மறுபடியும் திரும்பி வருகிறான்.

Share.

Leave A Reply