கேசவா அனைத்தும் வாசுதேவனே என்ற பகவானே வழிபடுவதல் என்பதை விவரி எங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! உலகம் முழுவதும் வாசுதேவனின் வடிவமே, வாசுதேவனைத் தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை.
இத்தத்துவத்தை நேரடியாகவும், உறுதியாகவும் அனுபவத்திற்கு வந்த நிலைத்து இருப்பது தான் அனைத்தும் வாசுதேவன் என்று வழிபடுவதன் பொருளாகும் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! மகாத்மா மிகவும் அரிதானவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! முதலாவதாக உலகில் மக்களுக்கு பகவானிடம் ஈடுபாடு ஏற்படுவதில்லை. ஆயிரக் கணக்கானவர்களில் யாரோ ஒருவருக்குத்தான் ஈடுபாடு தோன்றுகிறது.
அவரும் தமது இயல்புக்கு வசப்பட்டு முயற்சி, சிதறி வழிபாட்டை கைவிட்டு விடுகிறார். யாரோ ஒருவர் முனைப்புடன் முயற்சி செய்தாலும் சிரத்தை, பக்தி குறைவினால், ஆசைகளின் வெள்ளத்தில் மூழ்கி போய் பகவானைப் பற்றிய உண்மையான அடைவதில்லை.
இதில் இருந்து உலகில் பகவானை உள்ளபடி அறியும் மகா புருசர்கள் மிகச்சிலரை இருப்பார்கள் என்பது நிரூபணமாகிறது.
“இத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவர்” என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய மகாத்மாவாக ஒருவன் அடைந்து விட்டால் அவன் பெரும் நன்மையை அடைந்தவன் என்று கருத வேண்டும் என்கிறார்.
போகப் பொருள்களில் ஏற்படும் ஆசையினால் அறிவிழந்தவர்கள் தம்முடைய இயல்பினால் தூண்டப்பட்டு அந்தந்த நியமங்களைக் கைக்கொண்டு மற்ற தேவதைகளைப் புகழாக கொண்டு வழிபடுகிறார்கள்.
புலன் நுகர்ச்சியின் ஆசையில் மயங்கி உள்ள மனிதர்களிடம், “நான் யார்? என்னுடைய “கடமை என்ன? ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் உள்ள உறவு என்ன? எதற்காக மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது.”
“பிற உடல்களைக் காட்டிலும் இதற்கு என்ன பெருமை” என்ற சிந்தனை வருவதில்லை. போகங்களில் தன்னை இழக்காமல் இறைவழிபாடு செய்வதில் தான் தன்னுடைய ஆன்மீக உயர்வு இருக்கிறது. என்ற விவேகம் இருப்பதில்லை.
இவ்விதமாக விவேகத்திறன் மழுங்கிப் போவதுதான் ஆசையினால் அறிவிழத்தல் என்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்
கேசவா! இயல்பினால் தூண்டப்பட்டு என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பல பிறவிகளில் செய்த வினைகளில் சம்சாரங்கள் உள்ளத்தில் பதிந்து சுய பாவமாக அமைகின்றன.
இந்த சுயபாவம் ஒவ்வொரு உயிர்க்கும் மாறுபட்டு இருக்கும். அந்தந்த சுய பாவத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தெய்வ ஈடுபாடு அமையும்.
பூஜை முறைகளும் மாறும். இதைத்தான் இயல்பினால் தூண்டப்பட்டு என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
