கேசவா! ஞானியான பக்தரைப் பற்றி விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! சுகாசார்யா, சநகாதிகள், நாரதர், பீஷ்மர் முதலியோர் ஞானிகளில் புகழ் பெற்றவர்கள் குழந்தை பிரகலாதனும் ஞானியான பக்தன் தான்.

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே தேவரிசி நாரதருடைய உபதேசம் கிடைத்தது.

அசுர அரசனான கிரண்யகசிபுவின் மைந்தன் கிரன்யகசிபுவிற்கு என்னிடத்தில் வெறுப்பு.

அவனுடைய புதல்வன் என்னுடைய பக்தன். என்னுடைய பக்தன் என்பதால் கிரண்யகசிபு பலவாறு தன் மகனைத் துன்புறுத்தினான்.

பாம்புகளைக் கொண்டு கடிக்கச் செய்தான், யானைகளைக் கொண்டு மிதிக்கச் செய்தான், மலையின் உச்சியில் இருந்து தள்ளிவிடச் செய்தான், கடலில் தூக்கி எறியச் செய்தான், நெருப்பில் தள்ளி விடச் செய்தான்.

இவற்றில் எல்லாம் காப்பாற்றி ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியாக அவதரித்து கிரண்யகசிபுவை வதம் செய்தேன்.

பிரகலாதன் அவ்வளவு பயங்கரமான நிலைகளிலும் பயப்படவும் இல்லை, கலங்கவும் இல்லை. இதுதான் அவளுடைய ஞானப் பக்குவத்திற்கு அடையாளம்.

பிரகலாதன் குறுகுலத்தில் இருந்தபோதே தன்னுடன் படித்த மாணவர்களுக்கு திவ்ய உபதேசம் செய்தான். அதனால், அவன் ஞானி ஆவான் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! அவர்களுள் எப்பொழுதும் என்னிடமே ஒன்றிவிட்ட வேறு ஒன்றை சாராமல் பத்தி செய்கின்ற ஞானியான பக்தன் மிகவும் சிறந்தவன்.

ஏனெனில் என்னைத் 
தத்வரீதியாக அறிகின்ற ஞானிக்கு நான் மிகவும் இனியவன் அவனும் எனக்கு மிகவும் இனியவன் என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! ஞானி என்ற சொல்லுடன்
”நித்யயுக்தா” என்றும்
“ஏகபக்தி” என்றும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டிருப்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா!உலகம், உடல் மற்றும் தன்னையே முற்றிலுமாக மறந்து பகவானிடமே ஒருமித்த மனதோடு எப்போதும் ஒன்றி இருப்பவன்
“நித்யயுக்தா” வாகும்.

எவ்வித  நிமித்தமும் இல்லாமல் அதிக பிரியத்தை பகவானிடமே செலுத்துவது “ஏகபக்தி” என்பதாகும்.

பகவானைத் தத்வ ரீதியாகவும், உண்மையாகவும் அறிந்துள்ள ஞானியாகிய பக்தரிடம் இவை இரண்டு அம்சங்களும் நிறைந்து விளங்குவதால் இந்த அடைமொழிகளைக் கொடுக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply