கேசவா! சகவாசத்திற்கும் ஆத்மாவான பகவானே ஐயம் இல்லாமல் அறிந்து கொள்வதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! கோடான கோடி பிரம்மாண்டத்திலும் இதற்கு அப்பாலும் உள்ள அனைத்தும் அவரே, அனைத்து ஆற்றலும் எல்லாம் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர், உலக வடிவாக வெளிப்படுபவர். அவரை விடுத்து வேறொரு பொருள் இல்லவே இல்லை என்று அறிந்து கொள்வததான் பகவானை ஐயம் இல்லாமல் அறிந்து கொள்வதாகவும். என்கிறார்.
இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒன்றும் மீதம் இருக்காது. விஞ்ஞானத்துடன் கூடிய இந்த தத்துவ ஞானத்தை முழுமையாக நான் உனக்குச் சொல்வேன் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! இங்கு ‘ஞானம்’ விஞ்ஞானம் எதைக் குறிக்கின்றன என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! பகவானுடைய நிர்குண, நிராகார, தத்துவத்தின் பிரபாவம், பெருமை, ரகசியம் இவற்றை தெள்ளென அறிவது ‘ஞானம்’ எனப்படும்.
உருவமற்ற மற்றும் குணம் உள்ள தெய்வீக உருவமுள்ள தத்துவத்தின் லீலை, ரகசியம், குணம், பெருமை, பிரபாவம் இவற்றினுடைய உண்மை அறிவுதான் விஞ்ஞானம் எனப்படும்.
கேசவா! இனி சொல்லப் போகின்ற ஞான விஞ்ஞானங்களைத் தெரிந்து கொண்டு விட்டால் உலகில் தெரிந்து கொள்ள வேண்டியது வேறு ஒன்றும் இல்லை என்பதன் கருத்து விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
ஞானவிஞ்ஞான அறிவினால் பகவானின் சுயரூபத்தைப் பற்றிய உணர்வு கிட்டும் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டால் வேறு எதுவும் தெரிவதற்கு எஞ்சியிராது என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! இங்கு ‘மனிதன்’ என்ற சொல்லை உபயோகிப்பதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! “இங்கே மனிதப் பிறவி மிகவும் அரிது” பகவானின் கருணையினால் கிடைக்கிறது. சாதனை புரிய பிறவியினாலேயே மனிதர்கள் அனைவருக்கும் தகுதி உண்டு.
சாதி, வர்ணம், ஆசிரமம், தேகம் இவை எந்தவிதப் பாகுபாடும் இதற்கு இடையூறாக இருக்காது. மனிதப் பிறவிக்கு கர்மம் செய்யும் தகுதி உண்டு.
விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் சாதனை புரியும் சக்தியும், தகுதியும் கிடையாது. விதிவிலக்காக செய்தால் அது பகவானின் கருணையின் லீலை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவர்களுக்கு சக்தி இருந்தபோதிலும் போகங்களில் மிகுதியால் தகுதி இன்மை ஏற்படுவதால் சாதனை புரிவதில்லை என்கிறார் கிருஷ்ணன்.
