
அர்ச்சனா! எனது பக்தர்களில் தபசி, ஞானி, கர்மி முதலிய அனைவருமே எனக்கு இனியவர்களாயினும், இவர்களனை வரையும் விட என்னையே அடைவதற்கான சாதனை செய்பவர்கள் எனக்கு மிகவும் இனியவர்கள்.
ஆசை,எதிர்பார்ப்பு,மதிப்பு இவற்றை வைக்காமல் தன்னுடைய அந்த ராத்மாவை இரவு,பகலாக என்னிடமே ஈடுபடுத்தி தாயை அண்டி இருக்கும் சேயைப் போல என்னைத் தவிர வேறு ஒருவரையும் அறியவே மாட்டான்.
அவன் தான் என் இதயத்தின் உயர் செல்வம் குழந்தை அன்பினால் நிரம்பி இரவு, பகலாக தம்முடைய அன்புக்குரிய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாலேயே ஆறாத ஆனந்தம் அடைகிறேன்.
எண்ணற்ற அன்னைகளின் இதயங்களும் சிந்தனைக்கு எட்டாத எல்லையற்ற பிரேமமயமான என் உள்ளக் கடலின் ஒரு திவலைக்கு கூட சமமாகாது.
அத்தகைய அன்பு நிறைந்த தாய் உள்ளத்தால் நான் அவனை நோக்கிக் கொண்டே இருக்கிறேன். அவனுடைய ஒவ்வொரு செயலும் எனக்கு எல்லையற்ற சுகத்தைத் தருவதாகிறது.
எல்லா உலகங்களிலும் படைத்த காலத்தில் இருந்து எத்தனை வகையான என்னென்ன ஆனந்தங்கள் கிடைத்து வந்து கொண்டிருக்கின்றனவோ, அவை எல்லாம் என்னுடைய ஆனந்தக் கடலின் ஒரு துளியோடு கூட ஒப்பிட முடியாதவை.
இப்படிப் பட்ட எல்லையற்ற ஆனந்தத்தின் கடக்க முடியாத பெருங்கடலாக இருந்தும் கூட நான் என்னிடம் ஈடுபாடு கொண்ட பக்தனின் செயலைப் பார்த்து பார்த்து எல்லாவற்றிற்கும் மேலான ஆனந்தத்தை அடைந்து கொண்டே இருக்கிறேன்.
அவனை எங்கனம் பெருமைப்படுத்துவேன். அவன் நானே! அவனே என் உடமை அவனைக் காட்டிலும் மிக இனியவன் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்.
என் அன்பிற்கு உரியவனே உயர்ந்தவன். ஆகவே, என்னுடைய எண்ணத்தில் அவனே அனைவரிலும் மேலான பக்தன். அவனே அனைவரிலும் மேலான யோகி என தனக்குப் பிடித்த பிரியமான பக்தனைப் பற்றி விவரிக்கிறார் கிருஷ்ணன்.
ஆறாவது அத்தியாயம் நிறைவுற்றது.