கேசவா! சிதறிய மேகம் போல இரு வழிகளில் இருந்தும் நழுவி அழிந்து போவது என்பதை பற்றி விவரிங்கள் என்கிறான் அர்ஜுனர்.
அர்ச்சனா! பெரிய மேகத்தில் இருந்து விலகிய ஒரு சிறு பகுதி இன்னொரு மேகத்துடன் இணையாமல் தனித்து இருந்து விட்டால்…
அது மேலும் சிதறி காற்றில் கரைந்து விடுவது போல, சாதகன் சொர்க்கம் முதலிய மறுமையும் இழந்து, பரமாத்மாவையும் இழந்து வீணாகி விடமாட்டானா? என ஐயப்படுகிறாய் என்கிறார் கிருஷ்ணன்.
கிருஷ்ணா! என்னுடைய இந்த சந்தேகத்தை மீதமின்றி போக்குவதற்கு நீங்களே தகுதியானவர். ஏனெனில் இந்த சந்தேகத்தைப் போக்குவர் உங்களைத் தவிர யார் இருக்கிறார்? என்கிறான் அர்ச்சுனன்.
மரணத்திற்குப் பின் ஏற்படும் கதியைப் பற்றி அறிய விரும்புகிறான் அர்ஜுனன்.
புத்தியினாலோ, தர்க்கத்தினாலோ விடுவிக்க முடியாத ரகசியம் இது. கர்மங்களுடைய அனைத்து விளைவுகள் படைப்பின் முழுமையான ஒழுங்குமுறைகள் மேலும் எல்லா உலகங்களின் ரகசியங்கள் அத்தனையும் முழுமையாக அறிந்தவர்களே இதயும் அறிய முடியும்.
ஒவ்வொரு உலகங்களில் உள்ள தேவதைகள் எல்லா இடங்களுக்கும் செல்லும் ஆற்றல் உடைய ரிஷிகள், முனிவர்கள், தவசிகள், யோகிகள் இவர்கள் கூட ஓரளவு தான் இந்த விஷயங்களை அறிவர். அவர்கள் அறிவும் ஒரு எல்லைக்கு கட்டுப்பட்டது தான்.
இதன் முழுமையான ரகசியத்தை எல்லாவற்றிற்கும் தனி ஒரு தலைவனாகிய பகவான் தான் அறிவார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய பிரபாவத்தை முன்பே அர்ஜுனன் நன்கு அறிந்ததால். பகவான் பிறப்பட்டவர், அழிவற்றவர் எல்லா உயிரினங்களுக்கும் ஈஸ்வரன்.
குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்றவாறு எல்லோரையும் படைப்பவர் சர்வ லோக பிரம்மம் என்பதால் ஸ்ரீ கிருஷ்ணன் தான் பரமாத்மா என்று நம்பிக்கையை வெளிப்படுத்தி அவரை வேண்டுகிறான். உங்களைத் தவிர இந்த சந்தேகத்தைத் தீர்ப்பவர் வேறு யாரும் எனக்கு கிடைக்க மாட்டார்கள்.
நீங்கள் தான் இந்த சந்தேகத்தை அடியோடு தீர்க்க முடியும். என்று கூறிய அர்ச்சுனன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி
கிருஷ்னனை வேண்டுகிறான்.
