உழவு செய்தலும், பசுக்களை காத்தலும், பொருட்களை வாங்கி விற்பதில் நேர்மையாகவும், வியாபாரம் செய்தலும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்.

மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல் நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம் அதனால் எளிதுமாகும் என்கிறார்.

தத்தம் இயல்பான கடமைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிய சித்தியை அடைகிறான்.

தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரம நிலையை அடைகிறானோ அந்த முறையை சொல்கிறேன் கேள் என்கிறார்.

கேசவா! தத்தம் கடமைகளில் ஈடுபட்டவன் பரமசித்தியை அடைவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! நான்கு வர்ணத்தவர்களில் ஒவ்வொரு வர்ணத்தையும் சார்ந்த ஒவ்வொரு மனிதனையும் குறிக்கும். அவன் தன்னுடைய கர்மங்களில் ஈடுபடுவதால் பரமசித்தியை அடைவான்.

எனவே, மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் மோட்சம் அடையத் தகுதி உண்டு என்று உணர்த்துகிறார்.

பரமாத்மாவை அடைவதற்காக தன்னுடைய கர்மங்களை ஆற்றாமல் துறந்து விடுவது தேவை அன்று. பரமாத்மாவை அடைவதை இலட்சியமாகக் கொண்டு அவரவர் தமது வர்ணாசிரமத்திற்கு ஏற்ற கர்மங்களை எப்பொழுதும் ஆற்றிக் கொண்டே இருந்தாலே மனிதன் பரமாத்மாவை அடைந்து விடலாம்.

எந்தப் பரம்பொருளில் இருந்த சகல பிராணிகளும் உண்டாகினவோ, எந்த பரமாத்மாவினால் இந்த உலகம் முழுமையும் நிறைந்துள்ளதோ, அந்த பரமாத்மாவைத் தன்னுடைய இயல்பான கடமைகளினால் வழிபட்டு மனிதன் பரமசித்தி அடைகிறான். 

நன்கு முறைப்படி கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறை உள்ளதாயினும், தன்னுடைய தர்மம் உயர்ந்தது.

ஏனெனில், இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட தன்னுடைய கடமையைச் செய்கிற மனிதன் பாவத்தை அடைய மாட்டான்.

குந்தியின் மைந்தனே! குறை உள்ளதாயினும் தனக்குரிய இயல்பான கடமையை விட்டு விடலாகாது. ஏனெனில், புகையால் சூழப்பட்ட செயல்களும் ஏதோ ஒரு வகையில் குறையினால் சூழப்பட்டுள்ளன.

எதை செய்தாலும் குற்றம் குறை உள்ளதாகவே இருக்கும்.ஆகவே, இந்தச் செயல் தாழ்ந்தது, குற்றம் உள்ளது. என்று கண்டு கொண்டு மனிதன் சுயதர்மத்தைக் கடைபிடிக்காமல் இருக்கக் கூடாது.

மமகாரம், பற்றுதல் பயனில் கருத்து என்ற குறைகள் வராமல் தியாகம் செய்து அவற்றை முறைப்படி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் மனதில் தூய்மை ஏற்பட்டு விரைவில் பகவானை அடைய முடியும் என்கிறார்.

எங்கும் பற்றற்ற புத்தியுடைய ஆசை, அற்றவன் ஆன உள்ளத்தை அடக்கிய மனிதன் சாங்கிய யோகத்தினால் கர்மத் தளைகளில் இருந்து முற்றும் விடுபட்ட பெருநிலையை அடைகிறான்.

Share.

Leave A Reply