பகவானை அடைவதற்கு அனைவருக்கும் தகுதி இருக்கிறது. எனவே, பெரும் முயற்சி செய்தாவது தர்மங்களை கடைப்பிடித்து பகவானை அடைய விரும்ப வேண்டும்.

சூரவீரத்தனமும், தேக உறுதியும், திறமையும், போரில் புறம் காட்டாமையும், கொடையும், ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள்.

வலிமை உள்ளோர்களிலும் மிகப்பெரும் வலிமை பொருந்திய எதிரியையும் நியாயமான முறையில் எதிர்த்து தாக்குவதில் பயமின்மை.

நியாயமாகப் போராடுவதில் எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பது, யுத்தத்தின் போது சாகசத்துடனும், பெருமிதத்துடனும் துணிந்து நின்று போரிடுதல் வேண்டும் என்கிறார்.

எந்த சக்தியின் பிரபாவத்தினால் பிறருடைய பயமுறுத்தலுக்கு ஆளாக நேரிடுனும். எந்த ஒரு கடமையில் இருந்து மனிதன் தவறுவதில்லையோ, நீதிக்கு எதிராகச் செயல்படுவதிலும், பயப்படுகிறார்களோ அந்த சக்தியே ‘துணிவு’ என்று சொல்கிறார்.

மிகப் பெரும் இடுக்கண்கள் நேர்ந்தாலும், போர்க்களத்தில் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டாலும், தன் புதல்வர்களும்,  பேரன்களும் மரித்தாலும் எல்லாச் சொத்துக்களும் அழிந்துவிட்டாலும்…

எவ்விதமான மிகப்பேராபத்துக்கள் வந்தாலும் கலங்காமல் ஒருவன் தனது கடமையில் இருந்து வழுவாமல் முறைப்படி ஆன தன் கடமைகளில் ஈடுபட்டிருப்பதுதான் ‘உறுதி’ எனப்படும்.

ஒருவருக்கு ஒருவர் சண்டை இடும்போது அவர்களிடையே நியாயம் செய்து வைப்பது, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்வது, அதன்படி செய்வது.

போர் புரிவதிலும் நண்பர் பகைவர் இரண்டும் அல்லாதவருடன் தக்கபடி நடந்து கொள்வது தயவு தாட்சன்யம் ஆகும்.

போர் புரியும்போது சமாளிக்க முடியாது என்ற நிலையில் இன்னல்கள் நேர்ந்தாலும் புறமுதுகு காட்டி ஓடாமை.

நியாயமான முறையில் எதிர்த் தாக்குதல் செய்து தன் சக்தியை உபயோகித்து உயிரை மதியாமல் போரில் துணிந்து நிற்பது.

தர்மத்தை உணர்ந்து வீரச்சிறுவன் அபிமன்யு ஆறு மகாரதிகளுடன் தனி ஒருவனாகப் போர் புரிந்து உயர் துறந்தான் என்பது எடுத்துக்காட்டாகும்.

தன்னுடைய உடமையைத் தாராள மனமுடன் அவசியம் நேரும்போது தக்க பாத்திரங்களுக்கு வழங்குவது ‘கொடை’ ஆகும்.

மேலாண்மையின் மூலம் மக்கள் அநியாயமாக நடப்பதைத் தடுத்து அவர்களை நல்ல வழிகள் ஈடுபடச் செய்வது. தவறு செய்பவர்களைத் தண்டிப்பது, மக்களைக் கொண்டு தன்னுடைய ஆணையின் மூலம் நெறிப்படுத்துவது.

தன்னலம் பாராட்டாமல் அன்புடன் தன் புதல்வர்களைப் போல அவர்களைக் காப்பது, பராமரிப்பது ஆளுமை அல்லது ஈஸ்வரத் தன்மை ஆகும். இக்குணங்கள் சத்திரியர்களின்  இயல்பான குணங்கள். 

Share.

Leave A Reply