பதினெட்டாவது அத்தியாயம்
மோட்ச சந்நியாச யோகம்
பிறப்பு, இறப்பு என்ற உலகியல் தளையில் இருந்து என்றும் விடுபட்டு பரமானந்த ரூபனான பரமாத்மாவை அடைவதே மோட்சம் ஆகும்.
இந்த அத்தியாயத்தில் பகவான் முன்பு கூறப்பட்ட எல்லா அத்தியாயங்களுடைய சாரத்தையும் சுருங்கத் கூறி மோட்சத்திற்கு உபாயமான சாங்கிய யோகத்திற்கு ‘சன்யாசம்’ என்றும்,
கர்ம யோகத்திற்கு ‘தியாகம்’ என்றும் பெயர் சூட்டி. பிரிவு, உட்பிரிவுகளுடன் சிறந்ததொரு விளக்கம் தருகிறார்.
சாட்சாத் மோட்சமாகிய பரமாத்மாவிடம் எல்லாக் கர்மங்களையும் ஒப்படைத்து விடு அல்லது தியாகம் செய்துவிடு என்று கூறி உபதேசத்தை முடிக்கிறார். எனவே, இந்த அத்தியாயத்திற்கு ‘மோட்ச சன்நியாச யோகம்’ என்று பெயர்.
சர்வ வல்லமை படைத்த பரம்பொருளே! எல்லாக் குறைகளையும் களையும் சாட்சாத் பரமாத்மாவே! “நான் அறிய விரும்புவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். என் வேண்டுகோளைச் சற்று ஆலோசித்து எப்படிக் கூறினால் உண்மையை முழுமையாக நான் தெரிந்து கொள்வேனோ அவ்விதம் சந்யாசம், தியாகம் பற்றிய விவரங்களை ஐயங்கள் அனைத்தும் தீரும் வகையில் விளக்குங்கள்” என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! மனைவி, மக்கள், செல்வம், சொர்கம், விரும்பும் பொருள், நோயற்ற வாழ்க்கை வேண்டி இவ்விதம் எதிர்பார்ப்புடன் செய்யப்படும் யாகம், தானம், தவம், உபாசனை முதலிய மங்கல கர்மங்களே கர்ம கர்மங்கள்.
கர்மா கர்மங்களை செய்யாமல் தியாகம் செய்வதே சந்நியாசம். தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத நித்ய நிமித்த கடமைகளையும், அந்த அந்தக் காலத்தில் செய்ய வேண்டிய கர்மங்களையும் மட்டும் முறைப்படி செய்பவர்களே சன்யாசிகள் ஆவார்.