கேசவா! அகில உலகிலும் உள்ள சராசரங்கள் எல்லாவற்றினுடைய சுக துக்கங்களையும் தனக்கு நேர்ந்ததைப் போலவே உயிரினங்களை சமமாகப் பாவிப்பது பற்றி விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! எல்லா சராசர உயிரினங்களிலும் ஆத்ம பாவனை  சமமாக ஏற்பட்டு விட்டதால் அவற்றிடம் காணப்படும் சுகதுக்கங்களைத் தனக்கே ஏற்பட்டு விட்ட சுகதுக்கங்களுக்கு நிகராகப் பார்ப்பது தன்னுடையதைப் போல எல்லாவற்றினுடைய சுகதுக்களையும்  சமமாகக் காண்பது ஆகும்.

எல்லோரிடமும் ஆத்ம திருஷ்டி ஏற்பட்டு விட்ட காரணத்தினால் உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் ஆத்மாவாகவும் அவன் ஆகிவிடுகிறான்.

உலகில் அவனுக்கு அயலார் என்று எவரும் இருப்பதில்லை. ஆகவே, மனிதன் தனக்குத்தானே ஒரு பொழுதும் எவ்விதத்திலும் கொஞ்சம் கூடத் தீங்கிழைத்துக் கொள்ள விரும்ப மாட்டான்.

இயல்பாகவே இடைவிடாத சுகத்தை அடைவதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பான்.
மேலும், இப்படி செய்வதால் தானே தனக்கு அருள் புரிகிறவனாக எண்ணி அதற்காக நன்றியை விரும்ப மாட்டான். உதவியை எதிர்பார்க்க மாட்டான்.

அவன் தனது சுகத்திற்காக ஆற்றி விட்டோம் என்று எண்ணி செருக்கடைய  மாட்டான். அவன் தனது சுகத்திற்காக   முயற்சி செய்யாமல் இருக்கவே முடியாது

இது அவனுடைய இயல்பு மேற்கூறிய வண்ணம் அந்த யோகி உலகு அனைத்தும் ஒருபோதும் எவ்விதமாகவும் சிறிதளவும் கூட துன்பம் கொடுக்காமல் எப்பொழுதும் மற்றவருடைய சுகத்திற்காக இயல்பாகவே முயற்சி செய்கிறான்.

உண்மையில் இவை அனுபவம் இல்லாவிட்டால் உலகத்தாரின் நோக்கில் காணப்படும் துக்கங்களை நீக்குவதற்கான முயற்சி அவர் மூலமாக எப்படி நடைபெறும்  என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். 

அர்ச்சுனா!  இதுதான் அவனுடைய சிறப்பு கடமையை    மிகச்சிறந்த முறையில் செய்து வந்தாலும் உண்மையில் அச்செயலுக்கு இருப்பும் இல்லை அவருக்கு அவற்றினால் கொஞ்சம் கூட பயனும் இல்லை.

சிறு குழந்தைகள் விளையாடும் பொழுது மிகவும் அற்பமான கற்களுக்காகவும், விளையாட்டு பொருட்களுக் காகவும் தமக்குள் சண்டையிடுவர். அறியாமையினால் ஒருவருக்கு ஒருவர் காயம் உண்டாக்கித் துன்புறுவர் அவர்களுடைய இந்தச் சச்சரவு முற்றிலும் வீணானது அர்த்தமற்றது இவர்கள் சண்டையை  போக்கும் வகையில் மிகவும் புத்திசாலித்தனமாக முயற்சியை மேற்கொள்வார்கள்இது போல…

பரமாத்மாவை அடைந்து விட்ட யோகி துக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் உலகத்தின் துக்கத்தைப் போக்குவதற்கும் முயற்சி செய்கிறார் என விவரிக்கிறார் கிருஷ்ணர்.

Share.

Leave A Reply