கேசவா! ‘அவர்கள் உலக நாசத்திற்காகவே முனைகிறார்கள்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! புத்தி, மனம், சொல், உடல் இவற்றால் எவற்றைச் செய்தாலும், அவை எல்லாம் உலகிற்குத் துன்பம் விளைவிப்பதாகவும், நாசம் அளிப்பதாகவும் அமையும். இதைத்தான் அவர்களுடைய திறமை எல்லாம் உலக நாசத்திற்கே பயன்படுகிறது என்கிறார் கிருஷ்ணன்.

ஆடம்பரம், தற்பெருமை,அகங்காரம் இவற்றுடன் கூடியவர்களாக எவ்வகையிலும், பூர்த்தி செய்ய முடியாத நிறைவேறாத ஆசையைப் பற்றிக் கொண்டு செயல்படுவதும்.

அஞ்ஞானத்தினால்  பொய்யான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தூய்மையற்ற செயல்களையே மேற்கொண்டு உலகியலில் நடந்து கொள்கிறார்கள்.

அதாவது, மதிப்பு, செல்வம், போற்றுதல், புகழ் முதலியவற்றைத் தான் சாதித்துக் கொள்வதற்காக எதை எப்படிச் செய்தாலும் செய்வார்கள்.

அழகு, குணம், சாதி, செல்வம், கல்வி, பதவி, பணம், மக்கள் செல்வம் இவற்றினால் ஏற்படும் அகங்காரம் அசுர குணம் பெற்றவர்களுக்கு இருக்கும் என்கிறார் கிருஷ்ணன்.

மேலும், உலகியலில் விதவிதமான போகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அது எவ்விதத்திலும் நிறைவேறாமல் போகலாம். அதுதான் நிறைவேறாத ஆசை.

இவர்கள் எவ்வளவு அனுபவித்தாலும் போதாது என்று மேலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ள மனதில் பிடிவாதம் கொள்வார்கள்.

Share.

Leave A Reply