பதினான்காவது அத்தியாயம்
குண சம்பந்த யோகம்
இந்த அத்யாத்தில் சத்வகுணம், ராஜச குணம், தாமச குணம் என்ற முக்கோணங்களின் சுயரூபம், அவற்றின் செயல்பாடு, காரணம், சக்தி, இவற்றை கூறுகிறது.
அவை எந்த நிலையில் மனிதனை கட்டுப் படுத்துகிறது. அவற்றில் இருந்து மனிதன் விடுபட்டு பரமாத்மாவாகிய பரமா பதத்தை எவ்விதம் அடைவான்.
முக்குணத்தையும் கடந்து பரமாத்மாவை அடைந்து விட்ட மனிதனின் இலக்கணம் என்ன? முக்குணங்களைப் பற்றி தனித்தனியாக பிரித்து வர்ணித்து விளக்குகிறார். எனவே, இந்த அத்தியாயத்திற்கு ‘குண சம்மந்த யோகம்’ என்று பெயர்.
அர்ச்சுனா! எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருள் ஆன பரமேஸ்வரனையே சிந்தித்துக் கொண்டு இருக்கும் எல்லா முனிவர்களும்.
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு மிக மேலான சித்தியாகிய பரமாத்மாவை அடைந்திருக்கும் ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும், மிகச்சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
அதாவது, ஞானம் மிகவும் ஆழ்ந்ததாகவும் எளிதில் புரியாததாகவும் இருப்பதால் இதை அறிவது கடினம் அதை நன்கு விளக்க வைப்பதற்காகவே, முன்பே சொல்லி இருந்தாலும் வேறு விதமாக மறுபடியும் அதை கூறுகிறேன் என்கிறார்.
அர்ச்சுனா! ஞானத்தை அறிந்து பின்பற்றி என்னுடைய விஸ்வரூபத்தை அடைந்து உள்ளவர்கள். படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதும் இல்லை, துன்ப காலத்தில் துன்புறுவதும் இல்லை.
பிறப்பின் தொடக்கத்திற்கும், பிரளய காலத்திற்கும் சம்பந்தமே கிடையாது. ஏனெனில், நல்ல, தீய பிறவிகளில் பிறப்பதற்கு முக்கிய காரணம் குணங்களின் சேர்க்கை.
முக்தர்கள் குணங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர்கள். ஆகையால், அவர்கள் திரும்ப வருவதில்லை. தோன்றுதலே இல்லாத போது அழிவுக்கு அவசியமே இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! என்னுடைய மகா பிரம்மம் என்கிற மூலப்பொருள் அகில சராசரங்களுக்கும் பிறப்பிடம்.
இச்சமுதாயத்தில் உயிரினங்களின் கருவை வைக்கிறேன். இச்சேர்க்கையினால் சகல சராசரங்கள் உடைய உற்பத்தி ஏற்படுகிறது.