இந்த மனிதன் சராசரங்கள் அனைத்தினுடைய தனித்தனி தன்மை பரமாத்மா ஒருவரிடமே நிலை பெற்றிருப்பதாகவும், அந்த பரமாத்விடம் இருந்தே சகல சராசரங்களும் விரிவடைந்தனவாகவும் காண்கிறானோ அப்பொழுதே சத், சித், ஆனந்தமயமான பரமாத்மாவை அடைகிறான்.

அர்ச்சுனா! அனாதியான படியாலும், நற்குணமான படியாலும் இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்த போதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை எதிலும் ஒட்டுவதும் இல்லை என்கிறார்.

எங்கும் நிறைந்த ஆகாயம் நுண்ணியதாக இருப்பதால் எதிலும் ஒட்டுவ தில்லையோ, அவ்வாறே இவ்வுடலில் எங்கும் நிலை பெற்றிருக்கும் ஆத்மா நிர்குணமாக இருப்பதால் உடலில் குணங்களில் ஒட்டுவதில்லை.

எப்படி சூரியன் ஒருவன் இந்த பிரம்மாண்டம் முழுவதிலும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறான் என்கிறார்.

கேசவா! ஞானக் கண்ணால் அறிவது எவ்வாறு என விவரியுங்கள்  என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! கனவு காணும் மனிதனுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் விழிப்பு ஏற்பட்டதும் தான் கண்டது கனவு என்பதை உணர்கிறான்.

உண்மையில் விழிப்பு நிலைக்கு வருவது தான் இந்தத் துயரில் இருந்து மீள்வதற்கு வழி என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்போது அவன் விழித்துக் கொள்கிறான்.

அதுபோல, ஞான யோகியும் உடல், ஆத்மா வேறுபாட்டை உணர்ந்த உடன் அஞ்ஞானத்தினால் எல்லாவற்றையும் உணர்ந்து அதில் இருந்து விடுதலை பெறுவதாகும்.

அதாவது, தத்வ ஞானம் பெற்ற பிறகு அஞ்ஞானத்தோடு காணப்படும் பிரபஞ்சமும் இல்லாமல் போய்விடும். அக்கணமே பரமாத்மாவை அவன் அடைவான் என்கிறார் கிருஷ்ணன்.

பதின்மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Share.

Leave A Reply