கேசவா! ஆத்மாவை எல்லா உயிரினங்களிலும் இருப்பதாகவும் எல்லா உயிரினங்களையும் ஆத்மாவில் கற்பிக்கப் பட்டதாகவும் காண்பது என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! கனவில் காணப்பட்டவை எல்லாம் கற்பனையே உண்மை அல்ல. ஆயினும் தோற்றம் அளித்தன என்று காண்பது போல…

பலவிதமான கற்பனை செய்கிற மனிதன் கற்பிக்கப்பட்ட காட்சிகளைத் தன்னுடைய சங்கல்பதில் அடிப்படையில் ஆத்மாவில் காண்கிறான்.

அப்படி காண்பது தான் “எல்லா சாரசரங்களையும் ஆத்மாவில் கற்பிக்கப்பட்டு இருப்பதாக காண்பது ஆகும்”

எவன் எல்லா சராசரங்களும் வாசுதேவனான என்னிடம் அடங்கியிருப்பதாக பார்க்கிறானோ அவனுக்கு நான் காணப்படாமல் போவதில்லை அவனும் எனக்கு காணப்படாமல் போவதில்லை என்கிறார் அர்ச்சுனன்.

கேசவா! எல்லா சராசரங்களிலும் வாசு தேவனையும், வாசுதேவன் இடத்தில் எல்லா சராசரங்களையும் பார்ப்பது என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! மேகத்தில் ஆகாயமும், ஆகாயத்தில் மேகமும் உள்ளது போல எல்லா சராசரங்களிலும் வாசுதேவனும், வாசுதேவனிடம் எல்லா சராசரங்களும் நிறைந்து இருக்கின்றன என்ற அனுபவமே அவ்வாறு பார்ப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! பகவான் ஆகாயம் போல எல்லா சராசர உலகுக்கும் மூலகாரணமாக இருப்பது பற்றியும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் எப்படி இருக்கிறார் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! ஆகாயத்தில் இருந்து வாயு உண்டாகிறது. வாயுவில் இருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீர்மயமான மேகம் உண்டாகிறது.

ஆகாயம் ஐம்பெரும் பூதங்களில் முதன்மையானது மேகங்களுக்கு ஆதாரமாக ஆகாயம் இருக்கிறது. ஆகாயம் இல்லாவிட்டால் மேகங்கள் எங்கே இருக்கும்.

மேகங்கள் மட்டுமல்ல காற்று, நெருப்பு, தண்ணீர் முதலிய எந்த பூதமுமே ஆகாயத்தின் ஆதாரம் இல்லாமல் இருக்க முடியாது.

அதுபோல அகில சராசரங்களுக்கும் பகவான் ஒருவனே பரமா ஆதாரம் நான் எல்லாவற்றையும் தோற்றுவிப்பவன் என்னிடம் இருந்துதான் எல்லாம் இயங்குகிறது என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply