“நானும் பிரம்மமும் வேறல்ல என்கிறார் கிருஷ்ணன். பிரம்மம் என்பது என்னைத் தவிர வேறென்று நான் பிரம்மத்தை தவிர வேறல்ல” என்கிறார்.

நிர்குண  உபாசகர்களுக்கு பகவான் சகுண சுயரூபத்தை தரிசனம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால், சகுண உபாசகர்களுக்கு பகவானுடைய தரிசனமும் கிடைக்கும். சகுண உபாசனையின்   சிறப்பும் இதுதான்.

அர்ச்சுனா!சத்,சித்,ஆனந்த
மயமான உருவமற்ற பிரம்மத்தில் மனதை ஈடுபடுத்தும் மனிதர்களுக்கு சாதனையின் உழைப்பு அதிகமாகும்.

ஏனெனில், உடலில் பற்றுள்ளவர்களால் உருவம் அற்ற பிரம்ம விசயமான மார்க்கம் மிகுந்த சிரமத்துடன் அடைப்படுகிறது.

அதாவது, தனது என்ற பற்று இருந்தால் நிர்குண பிரம்மம் பற்றிய தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். எனவே, உடலில் பற்று உள்ளவர்கள் மிகவும் கடினமான உழைப்பினால் தான் அந்த நிலையை அடைய முடியும்.

சகுண உபாசகர்களுக்கு அவ்வளவு உழைப்புத் தேவை இல்லை. ஏனெனில், உபாசனை எளிதானது.

மேலும், அவர்கள் பகவானிடமே தங்கள் பொறுப்பை ஒப்படைத்து விட்டதால், அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் தானே முன்வந்து பகவான் செய்வார். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு என்ன சிரமம்? என்கிறார் கிருஷ்ணன்.

என்னையே கதியாகக் கொண்ட பக்தர்கள் எல்லா கர்மங்களையும் என்னிடம் சமர்ப்பணம் செய்து விட்டு சகுனமான பரமாத்மாவான என்னையே நினைத்து பக்தியோகத்துடன் இடைவிடாது தியானம் செய்து உபாசிக்க வேண்டும்.

“கேசவா!எல்லா கன்மங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்வது” என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா கடமைகளை ஆற்றும் போது தன்னை அடிமையாக நினைத்து பகவான் உடைய ஆணையையும், குறிப்பையும் அறிந்து பொம்மலாட்ட பொம்மையைப் போல எல்லா கடமைகளையும் ஆற்றிக் கொண்டே இருப்பதாகும்.

அவற்றின் விளைவுகளில் சிறிது கூடத் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பதும். சாஸ்திர முறைப்படி ஆற்றப்படும் ஒவ்வொரு செயலிலும்….

“நான் நிமித்தம் மாத்திரம் தான் இதை செய்ய எனக்கு ஆற்றல் கிடையாது. பகவான் தான் தம் விருப்பப்படி என் மூலம் இந்தக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்.” என்ற நிலையில் இருப்பதே ‘அர்ப்பணம் செய்வதாகும்’ என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply