கேசவா , தங்களை தத்துவ ரீதியாக எப்படி உணர்வது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்.

அர்ஜுனா  என்னுடைய செயல்களை உள்ளபடி அறிந்து நடப்பவர்களுக்கும், ஆசை, மமகாரம், அகங்காரம் அற்று உலகத்திற்கு வழிகாட்டியாக மட்டுமே வாழ்வார்கள்.அவர்களை எந்த கர்ம பந்தமும் கட்டுப்படுத்தாது.

பற்றும் ஆசையும் உள்ளவர்களுக்கு எனது செயல்கள் தெய்வீகமானது என்பது தெரியாது என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, மோட்சத்தில் நாட்டம் உடையவர்கள் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள்  என்பதை விவரியுங்கள்  என்கிறான் அர்ஜுனன் . .

அர்ஜுனா , பிறப்பு , இறப்பு என்ற சம்சார பந்தம் துக்கமயமானது ,நொடி நேரத்தவை என்று உணர்ந்து வைராக்யத்துடன் இவ்வுலக விண்ணுலக பந்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்  மோட்சத்தில் நாட்டம் உடையவர்கள் .

ஆனால், இவர்கள் கர்மங்களைச்  செய்யாமல் விடுவதால் பந்தத்தில் இருந்து விடுதலை கிடைக்காது .

என்னைப் போலக் கர்மங்களில் பற்று வைத்து ,மமகாரம், பயனில் கருத்து அகங்காரம் இவற்றை விடுவதே சிறந்ததாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

எனவே , நீயும் முன்னோர்களைப் போல கடமைகளை ஆற்றித்தான் ஆகவேண்டும் அவற்றை விடலாகாது, என்று கூறுகிறார் கிருஷ்ணன் .

மேலும் கூறுகிறார், அர்ஜுனா, கர்மம் என்றால் என்ன? அதர்மம் என்றால் என்ன? என்று தீர்மானிக்க முடியாமல் அறிவாளிகள் கூடத் திகைக்கிறார்கள் .

சாஸ்திர  ஞானத்தில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் கூட திகைக்கும் போது சாதாரண மனிதர்களுக்கு எப்படி புரியும் அவர்களுக்கு  கர்ம தத்துவம் புரியவே புரியாது .

கர்மம் என்றால் இப்பொழுது செய்யப்படுவது, அதர்மம் என்றால் கடமைகளை செய்யாமல் விடுவது, விகர்மம் என்றால் செய்யக் கூடாத செயல்களை செய்வது என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, துடிப்புடன் செயல் படுவது பற்றி விவரியுங்கள் என்கிறான்  அர்ஜுனன் ..

அர்ஜுனா, எந்த செயலும் துடிப்பு இல்லாமல் செயல்படாது. அதாவது இதயத் துடிப்பு இல்லாமல் எவ்வாறு இந்த உடல் இயங்க மறுக்குமோ, அதேபோல எந்த செயலிலும்  துடிப்பு இருக்க வேண்டும்.இல்லாத செயல் உதவாமல் போகும்.

என்னுடைய உண்மைத் தத்துவம் புரிந்து விட்டால் அந்த ஞானத்திற்குப் பெயர் ‘ஞானத்தீ’ஆகும்.

‘தீ” விறகுகளை சாம்பல் ஆக்குவது போல ஞானத்தீ  அனைத்துக் கர்மங்களையும் பொசுக்கி விடும் .

தீயில் வறுக்கப்பட்ட விதைகள் முளைவிடும் சக்தியை இழந்து விடுவது போல ஞானம் என்ற தீயில் வறுக்கப்பட்ட கர்மம் சாம்பலாகிப் போகும்.

கர்மம் ஒழிக்கப்பட்ட மனிதன் மகா மனிதனாக கருதப்படும் ‘ஞானி’,’பண்டிதர்’ சித்தன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள் .

‘இவர்கள் தங்களுக்கு  எந்தவிதமான பிரயோசனமும் இல்லாவிட்டாலும், உலகிற்கு வழிகாட்டும் பொருட்டு முறையோடு செவ்வனே செய்வது தான் தீரம் ,வீரம், கம்பீரம், அறிவுடைமை கொண்டவர்களின் செயல்கள் ஆகும்.

கேசவா , எல்லாக் கர்மங்களிலும் , பயன்களிலும், ஆசையை துறந்து விடுவது என்பதை விவரியுங்கள் .

அர்ஜுனா, அன்றாட வாழ்வியல் ஆசைகள், யாகம், தானம், தவம் போன்ற யோக ஆசைகள் இவற்றின் மீது இயல்பாகவே பற்றுதல் உண்டாகிறது .

இவற்றை செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலையில் அவற்றின் மேல் பற்று கொண்டு மூழ்கிவிடுகிறான் .

இந்தப் பற்றால் பகவானை மறந்து மற்ற நினைவுகள் கூட மழுங்கிவிடுகிறது. இந்தப் பற்றை துறந்தவனே கர்மத்தின் பயனில் ஆசையை துறந்தவனாவான் என்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, எல்லாம் துறந்தவனாக யார் கருதப்படுகிறார்கள் .அவற்றை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்

அர்ஜுனா, பற்றுதலை அறவே ஒழித்துவிட்டு உடலில் நான் எனது என்ற எண்ணத்தைத் துறந்து விடுவது உலகியல் பொருட்களையோ ,மனிதர்களையோ  சார்ந்திராமல்….

எல்லாம் இறைசெயல் என்ற எண்ணம் வந்து விட்டால் உலகியல் பொருள் எதுவும் தேவைப்படாது அவன் பூரணமாக அமைதியாகிவிடுவான் .

பிரம்மானந்த உருவமான என்னை அடைவதால் அவன் எப்பொழுதும் ஆனந்தத்திலேயே  மூழ்கி இருப்பான்.

எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவனுடைய இந்த நிலையில் சிறிதும் மாற்றம் ஏற்படாது .இதுதான் அவனது பற்றற்ற நிலையாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, ‘ஆனந்தத்தில் மூழ்கி இருப்பவன் கட்டுப்பட மாட்டான் என்று கூறுவதை விவரியுங்கள்”என்கிறான் அர்ஜுனன் .

..அர்ஜுனா, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எல்லாவிதமான கர்மங்களையும் நன்றாக கவனமாக விவேகத்துடன் எதையும் விடாமல் செய்பவன்…

அகங்காரம், மமகாரம் ,பயனில் கருத்து உள்ள மனிதன் இவற்றை செய்வதாலும், செய்யாமல் துறந்தாலும் கர்மபந்தத்தில் இருந்து விடுதலை பெற மாட்டான்.

மேலே சொன்னது போல் கர்மங்களில் ஈடுபட்டாலும் அவன் பந்தப்படவோ, கட்டுப்படவோ மாட்டான் .அவன் கர்மம் செய்தாலும், விலகி இருந்தாலும் எல்லாமே சாஸ்திர சம்மதம் தான் .

பற்றில்லாத உலகிற்கு வழிகாட்டவே எதுவும் செய்கிறான்.ஆகவே, அவன் செய்வது கர்மம் அல்ல என்று தெளிவாக விளக்குகிறார் கிருஷ்ணன் .

மேலும் மனம் புலன்கள்  அடங்கிய இந்த உடலை வென்று சகல போகப் பொருட்களையும் துறந்து எதையும் விரும்பாமல் இருப்பவன் உடலைப் பேணுவதற்கு உரிய செயலை மட்டும் செய்து கொண்டிருந்தாலும் பாவத்தை அடைவதில்லை .

கேசவா ,உடலை பேணுபவனுக்கு பாவம் வராது என்று சொல்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா,’ ஒன்று எவன் உலகியல் பொருள் எதுவும் தேவையில்லை’ என்று எண்ணுபவன்.

இரண்டு ‘எவன் தன் சுகத்திற்காக எந்தச் செயலையும் செய்யாமல், எந்த மனிதனையும் நாடாமல் இருப்பவன்.

மூன்று ,எவன் எல்லா விதமான இச்சை, பற்றுதல், வாசனை  முதலியவற்றை அறவே துறக்கிறானோ, அவனே இந்த உலகில் எதையும் விரும்பாமல் இருப்பவன்.

அவன் இல்லறத்தாயினும் , சந்நியாசி ஆயினும் அவன் சொன்ன வண்ணம் அவனது உடல் நடந்து கொள்ளும்.

இவன் வெளிப்பொருட்களில்  பற்றுதலை அறுத்துக் கொண்டு உட்பொருளாகிய பரமாத்வாகிய என்னையே நினைத்து சந்தோசமாக இருப்பான் .

வாழ்வதற்கு உரிய நீர், உணவு, அருந்தி வாழ்பவன், யாகம், தானம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் அவன் தான் எல்லா விதத்திலும் உலகிற்கு நன்மை செய்பவன் என்கிறார் கிருஷ்ணன் .

மேலும் அர்ஜுனா, தான் விரும்பாவிடினும், தானாகே கிடைத்ததில் எப்பொழுதும் சந்தோசம் உள்ளவனாக இருப்பான் .

பொறாமை அறவே அற்றவனாகும், மகிழ்ச்சி, துயரம் முதலிய இரண்டிற்கும் அப்பாற்பட்டவனாக இருப்பான்.. மேலும் எந்த செயல் செய்தாலும் கை கூடினாலும், கைகூடாவிட்டாலும் சம பாவனை உள்ள கர்மயோகி கர்மங்களை செய்தாலும் அவற்றிற்கு கட்டுப்பட மாட்டான் எனக் கூறுகிறார் கிருஷ்ணன் .

அர்ஜுனா, எந்த இலட்சியத்தோடு கடமை ஆற்றப்பட்டதோ , அந்த இலட்சியம் நிறைவேறினால் ‘சித்தி’ எனப்படுகிறது .

அந்த இலட்சியம் நிறைவேறாமற்போனால், அதற்கு ‘அசித்தி’ எனப்படுகிறது. இரண்டும் ஏற்படும்போது மகிழ்ச்சியும், துக்கமும் ஒரே பாவனையில் ஏற்றுக் கொள்வது சமபாவனையில் இருப்பது ஆகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, கர்மங்கள்  செய்தாலும்  பந்தப்பட மாட்டான் என்று கூறுவதன்  கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, மனிதனைப் படைத்த பிரம்மா கடமையைச் செய் என ஆணை இட்டார்.அதன்படி எல்லோரும் ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டுதான் இருக்கிறோம் .

எவனுக்கு உள்ளம் புலன்கள் இவற்றின் கூட்டான உடலில் ‘நான்’ என்ற எண்ணமோ ‘ உடல் எனது’ என்ற பாசமோ இல்லாது இருக்கும் போது அவனே ‘ஞானயோகி’  ஆகி  ‘முக்தி’ பெறுகிறான், என்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, ஞானயோகி  என்று யாரை குறிப்பிடுகிறீர்கள். பிரம்மகர்மம் என்பதையும் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, எங்கும் பரம்பொருளான பிரம்மமே நிறைந்திருக்கிறது என்று உணர்வதனால் ஒவ்வொரு செயலிலும் இடைவிடாது பரமாத்மா எண்ணத்திலே சிந்தனையை செலுத்துபவன் ‘ஞானயோகி’ ஆகிறான் என்று விவரிக்கிறார் கிருஷ்ணன் .

மேலும், ஒரு வைக்கோல் சுருளில்பட்ட நெருப்பு பெரிய வைக்கோல் போரில் பிடித்து அந்தச் சுருளும் வைக்கோல் போரும் சேர்ந்தே அழித்து விடுவது போலப் பற்று, பயனில் கருத்து , மமகாரம் ,அபிமானம் இவை அனைத்தும் தியாகம் என்கிற அக்னியில்…

இப்பொழுது செய்த கர்மங்களையும், முன்வினைகளையும் , சேர்த்துக் கொண்டு சாம்பலாக நீற்றுப்  போய்விடும் பின் எந்த கர்மத்திலும் ,எவ்விதப் பயனையும் விளைவிக்கக் கூடிய சக்தி அவற்றிற்கு இருக்காது என்கிறார் கிருஷ்ணன் .

கடவுள் கர்மம், திரவியம், கருவி இவை அனைத்தும் பிரம்மம் தான், அதாவது வேள்வியின் போது பயன்படுத்தும் பொருட்களும் பிரம்மம் தான் வேண்டும் கடவுளான மூலமும் பிரம்மாதான் அடையத்தக்க பயனும் பிரம்மம் தான் .

எங்கும் பிரம்மம் என்று நினைப்பது பிரம்மத்தை தவிர  வேறாக நினைக்காமல் இருப்பது இதுதான் பிரம்ம கருமத்தில் ஊன்றி இருப்பதன் பொருளாகும் .

இதன் சாதனையின் பயன் சந்தேகம் இன்றி ப்ரபிரம்மமான  பரமாத்மாவை அடைவது  தான், இவ்வாறு சாதனை புரிகிறவனுக்கு வேறு பயன் கிடையாது. இதைத்தான் கர்மத்தின் மூலம் கிடைக்கக் கூடிய பயனும் பிம்மம் தான் என்கிறேன்  என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

                                                  தொடரும் .

Share.

Leave A Reply