விநாயகர் துதி
உலகம் உன் அருளால் இயங்கும்
இயக்கம் உன் தயவால் நிலைக்கும்
நிலைக்கும் அற்புத என் எழுத்தின்
துவக்கம் நீயே விநாயகா துணை.
குரு வழிபாடு
அருளோடு துணை நிற்பான் இறைவன் அறத்தோடு அறிவூட்டிய குருவும்
தனித்தனியே எனக்கில்லை உலகின் எல்லாமுமாய் எனக்கமைந்தால் என் தாய்.
காப்பு
உலகம் நிறைந்திருக்கும் கருப்பு
உண்மை மறைந்திருக்கும் தனக்குள்
ஒளி நிறைந்திட எழுதுகிறேன் இருள் சூழாது காத்து நில்
உனக்காக பேசும் முருகன்
அண்டம் அவன் சொல்லிற்கு அசைய துறும்பாய் இவன்- உள்ளம் நிறைந்த
என் இறைவன் முருகன் எனக்குள் இருந்து
நின்று உரைத்த பாசுரங்கள் இதோ!
உணர துவங்கு உனக்குள் கடவுள்
நிறைந்து இருப்பவன் நான்- நீ
தனித்து நிக்கப்போவது இல்லை எப்போதும் உன்னோடு தான் நான் இருக்கின்றேன்.
எழுத்து
இசைகலை மணி
சி.எம். பாலகிருஷ்ணன்