எட்டாவது
உமேசமூர்த்தி
கந்தபுராணம்
தந்துழிஈசன் தன்னைத் தனமரும் அயனும் மாலும் வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி நந்தமது அருள தாகும் நங்கையோடு இனிது சேர்ந்தாம்
முந்தையின் வேதாச் செய்கைமுற்றிடும் போதியென்றான்.
முன்பொரு காலத்தில் பிரம்மன் படைப்பு தொழிலை செய்ய எண்ணி நான்கு புதல்வர்களை உண்டாக்கினார்.
அந்த நால்வரும் படைப்புக் கடவுளுக்கு உதவாமல் தவச் செயலை நாடிச் சென்று விட்டனர்.
அதன் பிறகு சிருட்டிச் செயல் நன்றாக நடைபெறாததால் விஷ்ணுவை நோக்கி பிரம்மா சென்றார்.
விஷ்ணுவின் பாதம் பணிந்து தன் இயலாமையை எடுத்துக் கூறினார்.
இதற்கு உதவக் கூடியவர் சிவனே என்றும், அவரை வணங்கினால் நமக்கு உதவுவார்… என்றும் விஷ்ணு கூறினார்.
பின்பு விஷ்ணுவும், பிரம்மாவும் வெள்ளிமலை அடைந்து அங்குள்ள நந்தி தேவரை வணங்கிச் சங்கரரை காண வந்துள்ள விபரம் கூறினர்.
நந்தி தேவரும் சங்கரனிடம் சொல்ல சங்கரனும் அவ்விருவரையும் தம் அருகே வரச் சொன்னார்.
திருமால் பெருமானை நோக்கிப் பெருமானே! பிரம்மன் படைப்பு செயல் செய்ய எண்ணியும் அது சரியாக நடைபெறவில்லை, என அக்குறைதனை அகற்ற வேண்டும் என பிரார்த்தித்து நின்றனர்.
சிவபெருமான் தனது நெற்றி கண்ணால் திருமால், திசைமுகன், பிரம்மனின் புதல்வர்கள் ஆகியோர்களைப் பார்க்க அனைவரும் சாம்பல் ஆயினர்.
அது சமயம் பரமன் மட்டுமே தனியாக இருந்தார். அப்பொழுது அப்பரமன் தம் திருத் தோளைப் பார்க்க அதிலிருந்து பெருமானது சக்தியை உமா தேவியாக திருவுரு கொண்டது.
அவ்வம்மையாரைத் தமக்கு இடப்புறத்து இருக்கச் செய்து ஒரு திருவிளையாடல் செய்தார்.
உடனே, விஷ்ணு, பிரம்மா, பிரம்மன் நான்கு முனிவர்களும் முன்பு போலவே படைக்கப் பெற்றனர்.
அவர்கள் அறுவரும் பரமனையும், அம்பிகையையும் வணங்கி நின்றார்கள்.
அகம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்கு வேண்டிய வரத்தினைக் கொடுத்தார்.
அன்று முதல் பிரம்மா நல்ல முறையில் படைப்பு தொழிலை செய்யலானார்.
அக்காலத்தில் எம்பெருமான் உமா தேவியாருடன் ஒன்றி நின்றதனால் உலகெல்லாம் விருத்தியாகியது.
சிவபெருமான் உலகத்தில் உள்ள எல்லா பொருள்களையும் படைத்து, காத்து, அழிக்கும் வகையாய் நானா பேதம் பெற்ற தமது திருவருளாகிய சக்தியை உமையம்மையாக வீற்றிருக்கக் கண்டு அடியார்கள் போற்றிப் புகழ்ந்தார்கள். இதனால் இவருக்கு உமேசமூர்த்தி என திருப் பெயர் உண்டாயிற்று.
உமேசமூர்த்தி ஆகிய சிவனும், உமையம்மையையும் வணங்கி நாம் வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்.
