ஐந்தாவது
மகா சதாசிவ மூர்த்தி
மகா சதாசிவ மூர்த்தி இருபத்தைந்து தலைகளையும், ஐம்பது கைகளையும் உடையவர்.
பல கோயில்களின் கோபுரங்களின் கதை சிற்பமாக மகா சதாசிவ மூர்த்தி இருக்கிறார்.
கையிலாய மலையில் பொன்மயமான பீடத்தில் அமர்ந்து இருப்பதாக ஞானியர்களால் கூறப்படுகிறது.
அங்குள்ள ஒரு சிறந்த இரத்தின சிங்கா சனத்தில் மகா சதாசிவப் பெருமாள் விளங்குகின்றார்.
அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற இருபத்தைந்து திருமுகங்களுடன் விளங்குபவரும். பற்பல ஆயுதங்களைக் கொண்டிருப்பவரும் ஆன அவர் திருக்கரங்களை அவ்வாயுதங்கள் அலங்கரிக்கப்பட்டு, பல கோடி சூரிய பிரகாசம் பொருந்தி….
இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பற்பல ஆபரணங்களை அணிந்து பரமானந்த மங்கல மூர்த்தி! மாயை அணுகப்படாத திருமேனியைக் கொண்டவராகவும் இருக்கிறார்.
இலட்சியம், இலட்சணம் அற்றவரும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத வருமான மகா சதாசிவ மூர்த்தியைச் சுற்றி அனேக ருத்திரர்கள், சித்தர்கள், முனிவர்கள் இருந்து வணங்குகிறார்கள் என்று ஸ்ரீ மகாஸ்காந்தம் அழகிய வண்ணம் விவரிக்கிறது.
மகா சதாசிவப் பெருமாள் மகா கைலாயத்தல் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அனுக்கிரகம் அளிக்கின்றார். என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே, இவரை அனுக்கிரக மூர்த்தி என்றும் கொள்ளுதல் வேண்டும்.
திருவிசைப்பா
“எண்ணில் பல்கோடி சேவடி முடிகள்
எண்ணில் பல்கோடி திண்டோள்கள்
எண்ணில் பல்கோடி திருவுரு நாமம்
ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாட்
நின்றைஞ்ஞூற்று
அந்தணர் ஏத்தும் எண்ணில்பல் கோடி குணத்தர் ஏர்வீழி
யிவர் நம்மை யாளுடையாரே”
மேலும், விவரிக்க முடியாதவர். ஏனெனில் சாத்திரங்களின் சங்கேத மொழியாகும். எனவே, மகா சதாசிவ மூர்த்தியை வணங்கி அவர் அருள் பெறுவோம்.
