3-முகலிங்க மூர்த்தி

அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாய் நின்று படைத்தல், நிலைநிறுத்தி காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் முதலிய ஐந்து தொழில்களையும் நடத்து கின்றபடியால்….

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் பேதமே  முகலிங்கம் என பெயர் பெறுகிறது.

ஆட்யம், அநாட்டியம், சுரோட்டியம், சர்வ சமம் என நான்கு வகைப்படும்.

ஆட்யம்: என்பது ஆயிரத்து ஒரு  லிங்கம் உடையது.

சுரோட்டியம்: நூற்றி எட்டு  லிங்கம் உடையது.

அநாட்டியம்: திருமுகங்களை பெறாது.

சர்வசமம் ஐந்து முக வேதங்களைப் பெறும்.

தற்புருசம், அகோர, வாமதேவ, முகங்கள் சத்யோசாத முகங்கள் சர்வ சமமாகும் இந்த ஐந்து மூர்த்திகள்….

பராசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, இச்சா சக்தி, ஆதிசக்தி என்னும் ஐவகை சக்திகளை கொண்டு முறையே….

சிவ சதாக்கியம், கன்மசாதாக்கியம், கர்த்திரு சாதக்கியம், மூர்த்தி சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியங்களால் பஞ்ச கிருத்தியங்களை நடத்துகின்றன.

பிரம்மன், விஷ்ணு, சிவன் முதலான ஐவர் உள்ளும் பிரிக்க முடியாதபடி இறைவன் நிறைந்து இருக்கின்றார். முகலிங்க மூர்த்திகளை வணங்கி வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்.

Share.

Leave A Reply