அட்டாட்ட விக்கிரக லீலை
13- புஜங்கலளித  மூர்த்தி

      காசி காண்டம்

“கலுழன் ஆற்றிய காமரு  தவத்தினை வியந்து நிலவு தூங்குஇளம் பிறையணி நீள்சடைக் கடவுள்
அழகில் நல்வரம்
அளித்துநம் அடியரிற் சிறந்தோன்
உலகு பூத்தசெந் தாமரை யுந்தியங்  கடவுள்.

ஆங்க வற்குநீ ஊர்தியா யடைதுமென்று அறைந்த தீங்கில் நல்வரம் உவந்தனம் செல்லெனக் கலுழன்
வீங்கி னான்தடம்
புயமுளங் குளிர்ப்புற விழிநீர்
துங்க மெய்ம்மயிர் சிலிர்ப்புறத் தொழுதிவை  சொல்வான்.”

தட்சப் பிரஜாபதியின் புதல்விகள் கத்ரு, வினதை.

காசியப முனிவரை மணம் செய்தனர். ஒரு நாள்! உங்களுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேளுங்கள் என்றார் காசியப முனிவர்.

பலம் பொருந்திய ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்றால் கத்ரு.

ஆற்றல் மிகுந்த இரண்டு பிள்ளைகள் போதும் என்றால் வினதை. விரும்பிய வரத்தை வழங்கினார் காசியப முனிவர்.

உரிய நேரத்தில் இருவரும் கருவுற்றார்கள்.

கத்ரு ஆயிரம் முட்டைகளை பிரசிவித்தாள். அதிலிருந்து ஆயிரம் பாம்புகள் பிறந்தன.

வினதை இரண்டு முட்டைகளை பிரசவித்தாள். பாம்பு குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒரு முட்டையை உடைத்து விட்டாள் வினதை.

மேல்பாதி உடலுடன் கீழ் பாதி உடல் இல்லாமலும் இருந்தான் மூத்த மகன். அவன் சூரிய பகவானின் தேரை செலுத்தும் சேவையை செய்து வருகிறான்.

அடுத்த முட்டையில் இருந்து ஒரு பறவை பிறந்தது. பிறந்த சில நாட்களில் பறந்து செல்லும் ஆற்றலுடன் பலவித வித்தைகளையும் கற்று சிறப்பானவனாக வளர்ந்தான். இது கத்ருவுக்கு பிடிக்கவில்லை.

சகோதரிகள் இருவரும் வனப் பகுதியில் நடந்து கொண்டு இருந்தனர்.

“உச்சைஸ்வரஸ்” என்ற வெள்ளைக் குதிரையை கண்டனர்.

இக்குதிரை என்ன நிறம் என்று கேட்டாள் கத்ரு.

சிரித்துக் கொண்டே வெள்ளை நிறம் என்றாள் வினதை.

தவறாக இருந்தால் நீ எனக்கு அடிமையாக வேண்டும் எனக் கூறிய கத்ரு, மனதில் தியானித்து தனது பாம்பு மகன்களை குதிரைவாலில் தங்கும் படி நினைத்தாள்.

இப்போது குதிரையின் வாலின் நிறம் மாறிவிட்டது பாம்பு தங்கியதால்.

தோற்றுவிட்டதாக கூறிய கத்ரு, வினதையை அடிமைப்படுத்தி வேலை செய்ய வைத்தாள்.

தாயின் வேதனை குறித்து நாரதர் மூலமாக அறிந்த பறவை கருடன்.

கத்ருவிடம் சென்ற கருடன் தன் தாயை விடுவிக்கும்படி வேண்டினான்.

கத்ரு மறுத்துவிட்டாள். கருடன் கத்ருவிடம் மிகவும் போராடி கேட்டது. ஒரு நிபந்தனையுடன் சம்மதித்தாள்.

தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தை கொடுக்க வேண்டும் என்றாள்.

கருடன் தேவலோகத்திற்கு பறந்து சென்று அமர்த்திரத்தை எடுத்து வரும்போது இந்திரனுடன் போரிட வேண்டியது ஆயிற்று. இந்திரன் ஏவிய வஜ்ராயுதம்  கூட கருடனை ஒன்றும் செய்யவில்லை தாயின் சேவையில் ஈடுபட்டிருந்ததால்.

இந்திரன் மேல் தான் வைத்திருக்கும் மதிப்பால் இந்திரன் தோற்றதாக இருக்க வேண்டாம் என்று கூறினான் கருடன்.

அந்த பேச்சால் நெகிழ்ந்த இந்திரன் அமிர்த கலசத்தை கருடனிடமே கொடுத்தான்.

கருடன் கத்துருவிடம் அமிர்தத்தை கொடுத்து தாயை மீட்டிக் கொண்டான்.

அமிர்தத்தை தர்பை காட்டில் மறைத்து வைத்தாள் கத்ரு.

குதிரையின் வாலில் இருந்த பாம்புகள் அமிர்தத்தை குடிக்க வந்தன.

கருடன் விரைந்து வந்து அமிர்தத்தை எடுத்து இந்திரனிடம் கொடுத்துவிட்டான்.

கத்ரு கோபம் கொண்டாள்.  என்னை ஏமாற்றி விட்டாய் என்று.  வஞ்சனையை, வஞ்சனையால் வென்றேன். அமிர்தத்தை கொடுத்தால் தாயை விடுவிப்பதாக சொன்னாய் அவ்வாரே செய்தேன்.

அமிதத்தை மீட்க எந்த நிபந்தனையும் இல்லை என்ற கருடன் இது தேவர்களுக்கு உரியது. அமிர்தத்தை  அடையும் தகுதி தங்களுக்கு இல்லை என்று கருடன் பறந்துவிட்டான்.

அமிர்தத்தை  உண்டு கருடன் நீயும் தேவர்கள் போல் வாழ் என இந்திரன் கூறினார்.

கருடன் மறுத்து விட   மகாவிஷ்ணு காட்சி தந்து முதுமையும், மரணமும் இல்லாமல் வாழ்வாய். எனக்கு இப்போது வாகனமாக இருப்பாய் என அருளினார். பெருமாளின் திருவடியில் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற கருடன் அவர் திருவடி சேவையில் மூழ்கிப் போனார்.

கருடனுக்கும், பாம்பிற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. இதை உணர்ந்த பாம்புகள் நாமும் சிவபெருமானை பூசித்து வந்து வரம் பெற வேண்டும் என்று ஆலோசனை செய்து  ஒரு சிவலிங்க குறியை செய்து விதிமுறைகளை பின்பற்றி சிவ அர்ச்சனை செய்து, நேர் நின்று ஆதி மத்தியாந்தரகிதராகிய அருட்பெரும் கடலே! தேவர்களுடைய பூஜை பலத்தாலும், பெருமாளுக்கு வாகனமாய் இருப்பதாலும் கருடன் எங்களை கொல்கிறான் அவனால் இறவா  வண்ணம் அருள் புரிய வேண்டும். என்று பிரார்த்தித்தன.

அருட்கடலாகிய சிவபெருமான் அந்த நாகங்களுக்காக தன் மனம் இறங்கி தன்னுடைய திருமேனியில் ஆபரணமாக அவைகளை அழகுறும் படி அணிந்து கொண்டார். 

சிவனை வணங்குவதால்  எந்த உயிருக்கும் அருள் வார் என்பதற்காகவே சிவபெருமான் அவ்வாறு அணிந்து கொண்டு அருள் பாலித்தார். எனவே, நாமும் சிவபெருமான் திருவடிகளை வணங்கி   வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோம்.

Share.

Leave A Reply