கோயில் கோபுரம் கீச்சு கீச்சு என்று பறக்கும் சிட்டுக்குருவி ,கிளி ,புறா வசிக்கும் இல்லம்.
காலை உதயத்தில் கீச் …கீச் என்று துயில் எழுப்பும் சிட்டுக் குருவியின் சங்கீதம் காதுகளுக்கு
இனிமை சேர்க்கும்.
அந்த இனிமை நகர்புற வளர்ச்சிக்கு சாலை விரிவு படுத்த மரங்களை வெட்டியதில் மறைந்து போயிருந்தது.
செல் போன் கோபுரம் அதன் கதிர் வீச்சால் கீச்… கீச் என்று பறந்து செல்லும் சிட்டுக்
குருவி குறைந்து விட்டது.
அடுக்கு மாடி வீடுகள் அழகாக அணிவகுத்தன.
இன்று பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் குருவிகளுக்கு உணவு வைக்கும் பழக்கம் கூட மறைந்து விட்டது.
வீட்டில் கூடு கட்டி இங்கும் அங்கும் பறந்து நம்முடனே வாழ்ந்த சிட்டுக் குருவிக்கு பாரதி பாட்டு எழுதினார்.
சின்னஞ் சிறு குருவி போல பறந்து
திரிந்து வா பாப்பா ,
என்று குழந்தைகள் சுறு சுறுப்பாக இருப்பதை சிட்டுக் குருவியுடன்
ஒப்பிட்டார் பாரதி.
சிட்டுக் குருவியின் கீச்… கீச் குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டுக் கொண்டு இருக்கிறது.
வீட்டைச் சுற்றி மரம் நட்டு அதில் சிறு சிறு பானைகளை தொங்க விட்டு நாள் தோறும் கைப்பிடி அளவு உடைத்த அரிசி வைத்து வளர்க்கும் சுசி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.
அப்பா ரகுவும் அம்மா ரேவதியும் மகள் குழந்தையாக இருந்த போது நட்ட மரங்கள் சுசி போல் மரங்களும் வளர்ந்து நின்றன.
மரங்களில் வசிக்கும் பறவைகள் குருவிகள் சுசி நேசிக்கும் தோழிகள் இப்படி நேசிக்கும் சுசி போன்ற சிறுமிகள் இருப்பதால் சிட்டுக் குருவியின் கீச்… கீச் சங்கீதம் கேட்கத்தான் செய்யும்.