இந்நூல் ஆசிரியர் கோவை இசைக் கல்லூரியில் வயலின் கற்றுக்கொண்டு இருக்கும் போது இசை கல்லூரி பேராசிரியர் டாக்டர் கே.ஏ. பக்கிரிசாமி பாரதி அவர்களிடம் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு குருவாக கற்றுக்கொண்ட குருவிடமே சென்னையில் இசை ஆசிரியர் பயிற்சி பெறும் போது  வாழ்த்துக்கள் பெற்று வெளியிட்ட நூல் "மழைத்துளி" வெளியிட்டவர் ஹைக்கூ தந்தை என கூறப்படும் கவிஞர் மேத்தா அவர்கள். தமிழுக்கும்,தாய்க்கும் ,தந்தைக்கும்,குருவுக்கும்  சிரம் தாழ்த்தி வணங்கும் ஆசிரியர் மழை விரும்பி, இசை விரும்பி, இயற்கை விரும்பி .எனவே மழையில் நனைந்து ,இசைத்து ,பயணம் செய்திருக்கிறார்.



மழை 

‘பலத்த மழை 

குளிர்தாங்க முடியாமல் 

வளைந்த மரங்கள்’ 

என்று மரத்தை உயிரோட்டமாக பார்க்கிறார் நூல் ஆசிரியர்.

‘எதிர் பார்ப்போடு
எல்லோரையும் நோக்குகிறான் 
சுண்டல் பையன் ‘
என்று சமுதாய அக்கறையுடன் சிறுவனின் எதிர் பார்ப்பை பார்க்கிறார்.
‘மழை நின்று விட்டது 
தூறல் நிற்கவில்லை 
மரத்தடியில் ‘

என்று  எதார்த்தமான நிகழ்வை பதிவு செய்கிறார்.

‘சேமிப்பு நிறைந்துள்ளது 
செலவழிக்க யாரும் வருவதில்லை 
வருத்தத்துடன்  நூலகம் ‘
மழைக்காலத்திலாவது நூலகத்திற்கு சென்று படியுங்கள் என்று தன் ஆதங்கத்துடன்  மழை கவிதையை முடிக்கிறார்.

இசை 

‘காலி குடம் 
கச்சேரியில் 
கடம் ‘


கடத்தின் இசையை நயம்பட சொல்கிறார்.

‘இன்பத்தின் வெளிப்பாடும் 
துன்பத்தின் ஆறுதலும்
இசை ‘
பிறப்பு முதல் இறப்பு வரை வருவது இசை என்பதை இரண்டு வரியில் கூறுகிறார் ஆசிரியர்.
‘கடவுளை அழைத்து 
மனிதனிடம் இணைத்தது 
இசை ‘
இசைக்கு மனிதன் மட்டும் அல்ல இறைவனும் விரும்பி மனிதனுடன் இணைய வைப்பது இசை என்கிறார்.
‘இசையின்றி 
பாதங்கள் நடனம் ஆடின 
வெப்பம் தாங்காமல் ‘

வெப்பம் தாங்காத கால்களை கூட நடனம் ஆடும் கால்களாக பார்ப்பது தான் இசை கலைஞன்.

பயணம் 

‘இரவெல்லாம் 
உட்கார்ந்து உறங்கினேன் 
பயணக்களைப்பு ‘
என்று பயனியர் இயல்பை கூறும் வரிகள் .
‘இறங்கும் வரை 
உறவாய் அமைந்தது 
பயணச்சீட்டு ‘
பயணத்தில் பாதுகாப்பாய் வைக்க வேண்டிய ஒன்று என்பதை உறவாய் கூறி இருப்பது நயம்பட உள்ளது.இசை மழையில்நனைந்ததால் பயணக் களைப்பு தெரியவில்லை.வாழ்த்துவோம் நூல் ஆசிரியரை .வளரட்டும் அவரது கவிதை பணிகள்.

பக்கம் : 80 
விலை :  35 -00
வெளியீடு : ஸ்ரீ சாரதை பதிப்பகம் 
எண். 7 0 சக்தி நகர், நேரு நகர் மேற்கு,
காளப்பட்டி -அஞ்சல் ,கோயம்புத்தூர் -641 048

email: editorchandran@gmail.com 

Share.

Leave A Reply