பரபரப்பான மாலை நேரம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள். கல்லூரியில் இருந்து வரும் கட்டிலங்காளைகளும் , கன்னிகளும் அலுவலகத்தில் இருந்து வருபவர்கள், சாதாரணமான மக்கள் என பல தரத்தவரும்  சாலையை ஆக்கிரமித்து பரபரப்பை உண்டாக்கினார்கள் .

ஒரு வயதான மனிதர் பரிதாபமாக நின்று கொண்டு இருக்கிறார். அவர் கையில் சிலர் சில்லறையை கொடுக்கிறார்கள் . அதைப் பார்த்த அவர், ஐயோ, பணமா?ஐயோ பணமா ? எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம் .

என் பெண்ணிற்கு ஒரு வரன் பார்த்துக் கொடுங்கள் .வரன் பார்த்து கொடுப்பீர்களா ? …ம்..இம்… மாட்டீர்களா  ? எனக்கு பணம்…பணம் என கத்தியபடி அந்த முதியவர் கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினார் .

அவரைத் துரத்திக் கொண்டு சிலர் பின்னால் ஓடி வந்தார்கள் .அவரைப் பிடியுங்கள், பிடியுங்கள் என கத்திக் கொண்டே ஓடி வந்தார்கள் .

ஒவ்வொருவரும் தங்கள் பரபரப்பில் இவர் சொன்ன வார்த்தைகளின் உண்மையை யாரும் உணரவும் இல்லை .தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை. அவர்கள் வேலை அவர்களுக்கு இந்த நவீன காலத்தில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற குணம் இன்னும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது .

அச்சாலையைக் கடக்க வந்த சமயம். அந்த முதியவர் ஓடுவதையும் அவரைப் பிடிக்க சிலர் வருவதையும் பார்த்த அந்த வாலிபன் , தன் கைக்கு எட்டிய தூரம் ஓடும் அந்த முதியவரைப் பிடித்து நிறுத்துகிறான் .

முதியவரை துரத்தி வந்தவர்கள் அருகில் வந்து நன்றியைத் தெரிவித்து விட்டு அவர் கைக்கு விலங்கு பூட்டுகிறார்கள் .

ஏன்? அவர் என்ன தப்பு செய்தார்? என்ன குற்றம் செய்தார் ? என அந்த ஆளிடம் கேட்க… ..

இவர் செய்த தப்பு பெண்களைப் பெற்றது..இவர் செய்த குற்றம் பெண்களுக்கு திருமணம் செய்ய நினைத்தது .இப்போது பைத்தியம் பிடித்து மருத்துவ மனையில்  இருக்கிறார் .அங்கு இருந்து தப்பி ஓடி வந்து விட்டார். நல்ல வேலை தம்பி மட்டும் பிடிக்கா விட்டால் இன்னும் எவ்வளவு தூரம் இந்த பைத்தியத்துடன் ஓட வேண்டி வந்திருக்குமோ என்று அவர்கள் தன் வருத்தத்தை சொல்லிக் கொண்டே நடையையக் கட்டினார்கள் .

‘அவர்கள் சிறிது தூரம் போய் விட்டார்கள் .ஆனால் அந்த வார்த்தைகள் மட்டும் திலீப் காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது .

‘ஆம்’

அந்த வாலிபன் பெயர் திலீப் குமார். அவன் கால்கள் அவனையும் அறியாமல் அவர்கள் பின்னால் சென்றது .

அக்கா அழுகையை  நிறுத்து அக்கா / எங்களுக்கு  ஆறுதல்  .சொல்ல வேண்டிய நீயே அழுதால் எப்படி அக்கா /எங்களைப் பாரேன் .என அக்கா நிர்மலாவிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தாள் விமலா .

அக்கா, அப்பாவைக்  கூட்டிக் கொண்டு வருகிறார்கள் என ஓடி வந்து சொன்னாள் மூன்றாவது தங்கை மாலா. நிர்மலா கண்ணைத் துடைத்துக் கொண்டு வாசல் பக்கம் வந்து விலங்கு மாட்டிய கைகளுடன் வரும் அப்பாவைக் கண்டதும் மீண்டு கண்கலங்கி அழைத்துக் கொண்டு உள்பக்கம் பாயுடன் பாயாக படுத்து இருக்கும் அன்னையிடம் கூட்டிச் செல்கிறாள் .

‘அம்மா கண்ணைத் திறந்து பார் அம்மா. அப்பா வந்து விட்டார். பாரம்மா/ என அழைக்கிறார்’ .’பல நாள் சாப்பிடாமல் பஞ்சடைந்த கண்களை மெதுவாக திறந்து பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றது .

பெண்ணுக்கு படிப்பு எதற்கு  என நினைத்து முதல் மகளைப் படிக்க வைக்காமல், கணவனே கண்கண்ட தெய்வம் என நினைக்க பழக்கி நகை , பணம் எனப் பாராமல் முதல் மகள் என வாரி இறைத்து திருமணம் செய்து கொடுத்த மகள் , படிப்பு இல்லை. நாலு இடங்களுக்குச் சென்றால்  நாகரீகமாக நடந்து கொள்ளத் தெரியவில்லை. என ‘வாழா வெட்டி ‘ எனப் பெயர் எடுத்து பிறந்த வீடே கதி என இருக்கும் நிர்மலா.

படிக்க வைத்து வேலையும் வாங்கிக் கொடுத்து வாழ்க்கைப் பட்டு போனவள் விமலா. எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறாள் என மகிழ்ச்சி அடைந்த அன்றே தலையில் இடி விழுந்தது போல் அந்த செய்தி வந்தது .

‘ஆம்’

அலுவலகம் சென்ற விமலாவின் கணவர் பேருந்து  விபத்தில் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

படரும் கொடியாக இருந்த விமலா பட்ட மரமாக வந்துநின்றாள் .

அடுத்தவள் மாலா கையில் இருந்தது  பாதி கடன் பட்டது பாதி தகுதிக்கு மீறிய மாப்பிள்ளை , எப்படியோ முடிந்தது திருமணம். வந்தது தலைத் தீபாவளி ,மாப்பிள்ளைக்கு மோதிரமும், மகளுக்கு வைரக் கம்மலும் வெண்டுமாம்.இரண்டும் கொண்டு வந்தால் தான் வரவேண்டும் இல்லாவிட்டால் அங்கயே இருந்து விடு என உத்தரவு போட்டு அனுப்பி விட்டார் மாமியார் ,மாப்பிள்ளையோ அம்மா பிள்ளை .

அம்மா சொன்னது போல் வாங்கிவா… மாலா / நான் போகிறேன், என விட்டுச் சென்றவன் திரும்பி வரவே இல்லை .

பெற்ற மகள்கள் மூன்று பேரும் இப்படி இருக்க வயது வந்த இன்னும் ஒரு பெண் வீட்டில் இருக்கிறாள் ..

‘ஆம்’ கலா கடைசிப் பெண் . அப்பா படும் துன்பங்களைப் பார்த்து அக்கா நிலைகளைக் கண்டு திருமணம் என்றாலே புயலாக வருபவள் .

தனக்கு திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருப்பவள் =. ஆண் வர்க்கத்தையே அடியோடு வெறுப்பவள் .

”ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி” என்பார்கள்.நாங்கள் நான்கு பெண்ணைப் பெற்றே இந்த நிலை ஆண்டவா/ என தன் எண்ணங்களை மனதில் நிறுத்தி எல்லோரையும் தன் பஞ்சடைந்த கண்களால் சுற்றிப் பார்த்தவள் பார்வை அப்படியே நின்று விட்டது.

‘ஆம்’ அவள் இறந்தது கூட தெரியாமல் என்னை விடுங்கள் என் பெண்ணிற்கு இன்று மாப்பிள்ளை  வர இருக்கிறார் .அழைத்து வர வேண்டும் என ஒட முயற்சி செய்கிறார் சிவலிங்கம்.

தந்தை ஒரு புறம் இப்படி , . தாய் இவ்வுலகை விட்டே போய்விட்டாள். தங்கள் நிலை இனி எப்படி எனக் கேள்விக் குறியுடன்  நிற்கும் பெண்களுக்கு…

திலீப் ஆறுதல் கூறி  இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.எல்லாம் முடிந்த பின் திலீப் கலாவை திருமணம் செய்து கொள்கிறான்….. .எப்படி?

வரதட்சணை வாங்காமல் ஒரு தன்மானம்  உள்ளவனாய் ஒரு பெண்ணிற்காவது நல்வழி பிறக்கட்டும் என நினைத்து அவளைக் கை பிடிக்கிறான் .

மற்ற மூன்று பெண்களும் ”கடலில் சிக்கிய படகாய்” தத்தளித்து நிற்கிறார்கள்.அவர்கள் மட்டும் தானா இன்னும் எத்தனை…எத்தனையோ  நபர்கள் கரை சேருவார்களா? கேள்விக்குறிதான் .

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் பெண்களைப் பெற்றவர்களுக்கு  ஏற்பட்ட ஒரு நிர்கதியற்ற நிலை இப்படி இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் நன்றாகப் படித்து நல்ல வேலைகளுக்குச் சென்று வருமானம் ஈட்டுகிறார்கள்.

திருமணம் முறையிலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. பல பெண்கள் தாங்களே தெரிவுசெய்து கொண்டு திருமணம் செய்து கொள்ளும் நிலையும் உருவாகி உள்ளது .நாட்டிலே எல்லாவற்றிலும்  மாற்றங்கள் வந்து விட்டன நல்ல .மாற்றங்கள் நல்லது தானே ? தீப ஒளிபோல் பெண்களின் வாழ்வும் ஒளி வீசட்டும்.

Share.

Leave A Reply