வான் மதியும்,ரவியும்  அண்ணன்,தங்கை, ரவி நான்காம் வகுப்பும் ,வான்மதி மூன்றாம் வகுப்பும் படித்துக்கொண்டு  இருந்தார்கள்.இருவரும் சேர்ந்தே பள்ளிக்குச் செல்வார்கள். பள்ளி முடிந்த பின் தன தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவான் ரவி.


இருவரின் அன்பைப் பார்த்த எல்லோரும் பாசப்பறவைகள் வாராங்கடா என் கிண்டல் செய்தவர்களும் உண்டு.அன்பை புரிந்து கொண்டவர்களும் உண்டு.எதுவும் பாதிக்காத வயது.குழந்தைப் பருவம் என்பதால் இரண்டையும் ஏற்றுக்கொண்டனர் இருவரும்.

வான்மதி படிப்பில் கெட்டிக்காரி எதையும் சோதித்து பார்க்க வேண்டும் என்ற செயல் திறனும் இருந்தது. வான்மதி அண்ணனிடம் எதற்கு? எப்படி என விளக்கமும் ஆக்க பூர்வமான கேள்விகளும் கேட்பாள். ரவி தனக்கு தெரிந்த முறையில் பதில் சொல்வான்.
ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது…..சிறுவர்,சிறுமிகள் பேசிக்கொண்டு வந்தார்கள்.அதில் ஒரு சிறுவன் பாலு கூறினான்.’ஊமைக்கு 
மூக்கை சொரிந்தால் கோபம் வரும்’ என்று, உடனே ,வான்மதி கேட்டாள் ‘உண்மையாகவா/’ என….
‘ஆமாம் .எங்க வீட்டற்கு பக்கத்தில் ஒரு அண்ணன் இருக்கிறார்கள்.அவர்கள் முன் சென்று மூக்கை சொரிவேன்.என்னை அடிக்க வருவார்கள்,ஓடி ஒளிந்து கொள்வேன்.இது எனக்கு ஒரு விளையாட்டாக இருக்கிறது’ என்றான் சிறுவன் பாலு.
சில நாட்கள் கடந்தது …
ஒரு நாள்  பாலு வீட்டற்கு ரவியும் ,வான்மதியும் வந்தனர். அப்போது அங்கு நின்ற ராமு அண்ணனை காண்பித்தான் பாலு.
அவளுக்கு உடனே ஒரு கேள்வி எழுந்தது.பாலு சொல்வது உண்மையா? என்பதை அறிய என்னியவள் ..
ஓடிப்போய் ‘அண்ணா’ என  ….அழைத்தவள் மூக்கை சொரிந்தாள் வான்மதி
மூக்கை சொரியவும் தன்னை கிண்டல் செய்வதை பார்த்த ராமு கோபத்தில் அடிக்க கையை ஓங்கினான்.
பயந்து போன  வான்மதி தன்னை திடப்படுத்திக்கொண்டு ஓடினாள் ஓடிய வேகத்தில் கல் தடுக்கி கீழே விழுந்தாள் வான்மதி.
பல் உதட்டில் குத்தி இரத்தம் கொட்டியது.கை.கால்களில் வேறு காயம்…


துரத்திக்கொண்டு வந்த ராமு ,விழுந்து கிடந்த வான்மதியை தூக்கி விட்டவன் ,இனி இதுபோல் செய்யாதே என சைகையால் கூறிச் சென்றான் .

அங்கு ஓடிவந்த ரவி பதறியபடி தன் தங்கையின் இரத்தத்தை கைகுட்டையால் துடைத்து விட்டவன்,பையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்கக் கொடுத்தான்.
இறைவன் படைப்பில் குறையுடன் பிறந்தவர்களை கேலி செய்யக்கூடாது எனகண்டிப்பாக சொன்னான் ரவி,தங்கையின் கையைப் பிடித்து பரிவுடன் அழைத்துச் சென்றான்.
இதைத்தான் ‘தான் ஆடாவிட்டாலும்தன் தசையாடும் ‘என்பார்களோ!
தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் பாலு. பிறர் மனம் நோக செய்ததின் பயன் என எண்ணிய வான்மதி இனி இது போன்ற மனித உணர்வுகளில் விளையாடக்கூடாது என உணர்வுப் பூர்வமாக புரிந்து கொண்டான்.
Share.

Leave A Reply