295-மிட்டாய் தின்னத் தின்ன பல்லில் ஓட்டை படிக்க படிக்க மனதில் தெளிவு.
296- புறத்தை மட்டும் பார்ப்பவன் மனிதன்
அகத்தை அறிபவன் கவிஞன்.
297-போகுமிடத்தை பொறுத்து பூவுக்கு பெருமை எண்ணமே மனதிற்குப் பெருமை.
298-அன்பு என்பது பலாப்பழம் போன்றது அகந்தை என்பது கள்ளிச்செடி.
299- மலரின் மணம் வாடும்வரை இருக்கும் மனித மணம் செயலால் நிலைக்கும்.
300- பலமலர்கள் தொடுத்தால் கதம்பம் ஆகும் பலர் இணைந்தால் செயல் பெருகும்.