வின் டீசல் பெயரை பார்த்தவுடனேயே தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. நம்ம ஆடியன்ஸின் பரந்த மனதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. தியேட்டர்களில் தமிழ் படஹீரோக்களுக்கு தான் நமது ஆடியன்ஸின் ஆரவாரம் அதிகம் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு தான். படத்தின் முதல் காட்சியே ஒரு தீவில் நடக்கும் கார் ரேசில் ஆரம்பிக்கிறது. அதில் ஹீரோவுக்கு வழக்கம் போல் டப்பா கார் தான் கிடைக்கிறது. கார் அதிவேகமாக செல்லும் ஒரு கருவியை இணைக்கிறார். அதனால் கார் தீப்பிடிக்கும் என தெரிந்தும் தெறிக்க விடுகிறார். கார் தீப்பிடிக்க, காரை ரிவர்சில் ஓட்டி ஜெயிக்கிறார். இந்த நிலையில் நியூக்ளியர் வெப்ன்சை வின் டீசல் குழுவினர் கடத்துக்கின்றனர். ஆனால் வின் டீசல் தனது குழுவினருக்கு டிமிக்கி கொடுத்தி விட்டு காரை வேகமாக ஓட்டுகிறார். அப்போது விமானம் ஒன்று வருகிறது. அதில் ஹீரோவின் கார் ஏறி கொள்ள விமானம் மேலே பறக்கிறது. இதுபோன்ற அதிரடி காட்சிகளெல்லாம் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஆடியன்சுகளுக்கு பழகியது தான். விமானத்தில் வின் டீசலின் குழந்தை, மனைவியை கடத்தி வைத்து மிரட்டி, வில்லி தனது வேலைகளை செய்ய கட்டளையிடுகிறார். வின் டீசல் ஏன் தங்களுக்கு துரோகம் செய்தார் என அவரது குழுவினர் குழப்பம் அடைக்கின்றனர். ஹீரோ எங்கிருக்கிறார் என குழுவினர் தேடுகின்றனர். அதனை வில்லி, ஹீரோ மூலமே தடுக்கிறார். தொடர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டை நடக்கிறது. தொடர்ந்து நியூக்ளியர் செலுத்துவதற்கான பார்மூலாவை ஹீரோ கடத்துக்கிறார். அப்போது பல கார்களை ரிமோட் மூலம் வேகமாக வில்லி டீம் இயக்குகிறது. தொடர்ந்து ரஷ்யா வரை சென்று நியூக்ளியர் வெப்ன்சை இயக்க முயற்சிக்கிறார் வில்லி. இதனை ஹீரோவும், அவர்களது குழுவினர்களும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை. இதில் விமானத்தில் வின்டீசலின் குழந்தையை காப்பாற்ற ஜேசன் ஸ்டாதம் போடும் சண்டை காட்சிகள், சிறைச்சாலையில் போடும் ராக் போடும் சண்டைகள், ரஷ்யாவில் நீர்மூழ்கி கப்பலை வந்து ஹீரோவையும், அவர்களது குழுவினரை தரைமட்டமாக்க முயற்சிக்கும் காட்சிகள் ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தோ விருந்து. பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ரசிகர்களுக்கு வழக்கம் போல் இன்னொரு ஆக்ஷன் விருந்து.