கேசவா, ஒன்பதுவாயில்கள்என்பதனையும் ‘மனதிலிருந்துகர்மங்களைதுறப்பது’ என்பதையும்விவரியுங்கள்என்கிறான்அர்ஜுனன் .
அர்ஜுனா, புலன் அடக்கத்தைத்தான் ஒன்பது வாயில்கள் என்று குறிப்-பிட்டேன்.மேலும் எல்லா கர்மங்களையும் விட்டுவிட்டால் அன்றாட வாழ்க்கை கூட நடக்காது
ஆகவே, விவேகத்தோடு செய்கிறேன், செய்விக்கிறேன் என்ற எண்ணத்தை விளக்குவதுதான் சாங்கிய யோகியின் தியாகம் ஆகும் .
இக்கருத்தை தெளிவாகக் காட்டுவதற்காகவே மனதில் இருந்து கர்மங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னேன் என்றவர் …
மனிதர்களுக்கு கடவுள் என்னும் தன்மையை உண்டு பண்ணுவதில்லை ,கர்மங்களையும் உண்டு பண்ணுவதில்லை , கர்மங்களையும் சேர்த்து வைத்ததையும் ஏற்படுத்துவதில்லை இயல்புகள்தான் செயல்படுகிறது .
கேசவா, உலகத்தைப்படைப்போனாகியபகவான்செய்வதில்லைஎன்றுகூறுவதன்கருத்தைவிவரியுங்கள்என்கிறான்அர்ஜுனன் .
அர்ஜுனா, எங்கெல்லாம் படைத்தல் முதலான கர்மங்களைச் செய்கிறவர் என்ற பேச்சு வருகிறதோ , அங்கெல்லாம் அது சகுண பிரம்மதனத்தை தான் குறிக்கும்..
மனிதனிடம் ‘தான்’ செய்பவன் என்ற எண்ணத்தை உண்டாக்குவதில்லை.மனிதன் தான் செய்யும் காரியங்களில் கர்த்தா என்ற அபிமானம் கொண்டான் .ஆனால் அதற்கு நான் பொறுப்பு அல்ல .
அஞ்ஞானியான மனிதன் அகங்காரத்திற்கு ஆட்பட்டு தன்னைக் கடவுள் என்று நினைக்கிறான் .
நல்ல செயலையோ, தீய செயலையோ இவன் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவதில்லை. இப்படி நானே திட்டமிட்டால் ‘செய் ,செய்யாதே ‘என்று கூறும் சாஸ்திரங்கள் பயனற்றுப் போய்விடும்.
மனிதனுடைய அஞ்ஞானத்தினால் மனிதனிடம் கர்ம கர்மபயனில் சேர்க்கை ஒட்டிக் கொள்கிறது.
சிலர் பயனில் ருசி கொண்டு தான் கடவுள் தனக்கு இன்ன பயன் வேண்டுமென்று நினைத்துக் கர்மத்தைச் செய்து அலட்டிக் கொள்கிறார்கள்.
கடவுள், கர்மம் ,பயன் மூன்றும் என்னுடைய செயல் என்றாலும் மனிதன் இவற்றில் இருந்து மீளவே முடியாது.மனிதனைக் கரை ஏற்றுவதற்கு எந்த வழியும் இல்லாமல் போய்விடும்.
மனிதன் கர்மங்களின் பயனை எனக்கு அர்ப்பணம் செய்வது அல்லது கர்மத்தின் பயனையும் பற்றுதலையும் அறவே துறந்து கர்ம தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் .
என்பதை விளக்கவே பகவான் மனிதனுக்கு ‘கடவுள்’ என்ற அபிமானத்தையும் கர்மத்தையும் கர்மத்தின் பயனையும் படைப்பதில்லை என்று கூறினேன் என்கிறார் கிருஷ்ணன் .
மேலும் கூறுகிறார் , எங்கும் நிறைந்த நான் யாருடைய பாவச் செயலையும் ஏற்பது இல்லை . நற்செயல்களையும் ஏற்பது இல்லை .
அஞ்ஞானத்தினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது. அதனால் அஞ்ஞானிகளான எல்லா மனிதர்களும் மோகம் அடைகிறார்கள் .
என்னுடைய சக்தியினாலேயே மனிதர்கள் எல்லாக் கர்மங்களையும் செய்கிறார்கள் எல்லோருக்கும் சக்தி, புத்தி புலன்கள் முதலியவற்றை அவர்களுடைய கர்மத்துக்கு ஏற்றபடி நடக்கிறது .மனிதன் செய்கின்ற கர்மங்களின் பயனை நான் ஏற்பதில்லை, அவனையே சேரும் என்கிறார் கிருஷ்ணன்.
அதாவது ஒரு மனிதன் பல நற்காரியங்கள் செய்து ஞானம் பெற்றாலும், கடவுள் ஆக முடியாதோ, அதுபோல நான் பிறப்பு எடுத்து மனிதர்களுக்கு உலக நெறியை உணர்த்த பிறந்தாலும் , மனிதர்களுடைய கர்மங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை .அவர் செய்த கர்ம பலன்கள் அவரையே சென்று அடையும் என விளக்குகிறார் கிருஷ்ணன் .

கேசவா ,” அஞ்ஞானிகளானஎல்லாமனிதர்களும்மோகமடைந்துள்ளனர்” என்றுகூறுவதன்கருத்தைவிவரியுங்கள்என்கிறான்அர்ஜுனன் .
அர்ஜுனா, இங்கு ஒரு ஐயம் ஏற்படக் கூடும் உண்மையில் மனிதரோ, பகவானோ, கர்மங்களோடும், அவற்றின் பயன்களோடும் சம்பந்தப்படவில்லை என்றால், உலகத்தில் நான் இந்தக் கர்மத்தைச் செய்கிறேன்.
இது என்னுடைய வேலை எனக்கு இதனுடைய பயன் கிடைக்கும் என்று மனிதர்கள் செய்கிறார்களோ, அது எப்படி ? இந்த ஐயத்தை நீக்குவதற்காக இவ்விளக்கத்தை கூறினேன் .
பல ஆண்டுகாலமாக இருக்கின்ற அஞ்ஞானத்தினால் எல்லா உயிர்களுக்கும் உண்மையான ஞானம் மறைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் தங்களுடையதும் ,பகவானுடையதுமான சுயரூபத்தையும், அவ்விதமே கர்மங்களுடைய தத்வத்தையும் அறியாத காரணத்தினால், தன் மேலும் -பகவான் மேலும் கடவுள் கர்ம, கர்ம பலன் ஆகியவற்றிற்குத் தொடர்பைக் கற்பித்து மோகத்திலேஆழ்ந்து போயிருக்கிறார்கள் என்கின்ற கிருஷ்ணன் …
மேலும் கூறுகிறார், எந்த அஞ்ஞானம் பரமாத்மாவினுடைய தத்வ ஞானத்தினால் அழிக்கப்பட்டதோ அந்த ஞானம் ஆதவன் போல சத்,சித் ஆனந்தமயமான பரமாத்மாவை பிரகாசிக்கச் செய்து எனது சுயரூப காட்சியைக் கண்கூடாகக் காணச் செய்கிறது .
எவர்களுடைய மனம், புத்தி பரமாத்மாவிடம் ஒன்றி ஆனந்தமயமான ஐக்ய நிலையில் பகவானை மட்டுமே சார்ந்திருக்கின்ற அத்தகைய மனிதர்கள் ஞானத்தினால் பாவமற்றவர்கள் ஆகி மீண்டும் திரும்பி பிறக்காத பரம கதியை அடைகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன் .
கேசவா, திரும்பிபிறக்காதபதவியைஅடைவதுஎன்பதைவிளக்கிகூறுங்கள்என்கிறான்அர்ஜுனன்.
அர்ஜுனா அட்சய சுகம், நிர்வாண பிரம்மம் உத்தமசுகம் ,பரமகதி, பரமதாமம் , திவ்விய பாதம், திவ்ய பரமபுருசன், என்ற பெயர்களால் பகவானால் வர்ணிக் கப்படுபவன் எவனோ அவனே …
உண்மை அறிவின் பயனாக பரமாத்மாவிடம் …ஒன்றிவிட்ட அந்த நிலையே திரும்பி வர இயலாத பதவி என்கிறார் கிருஷ்ணன் .
மேலும் தத்வ ஞானிகள் கல்வியோடும் நெறியோடும் கூடிய பிரம்மத்தையும், அதை கற்கும் மனிதர்களையும் விலங்குகளையும், பறவைகளையும் பாவிகளையும் சம நோக்குடனே நேசிப்பார் என விளக்குகிறார் கிருஷ்ணன் .
கேசவா , எல்லாஇடத்திலும்சமபாவனைஏற்பட்டுவிட்டகாரணத்தால்ஞானிகள்எல்லோரிடமும்ஒரேமாதிரியாகப்பழகுவார்களாஎனக்கேட்கிறான்அர்ஜுனன் .
அர்ஜுனா, எல்லோரிடமும் ஒரேவிதமாக பழகுவது என்பது எவருக்கும் சாத்தியம் இல்லை. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நடைமுறை வேறுபாடுகள் எல்லோரிடமும் உள்ளவை தான் .
ஞானிகளிடம் உலகத்தார் போல இவன் மேலானவன், மற்றவன் கீழானவன் , விலங்குகளில் இதில் பயன் அதிகம், பயன்பாடு குறைவு என்ற நோக்கில் விருப்பு, வெறுப்பு காட்டாமல் இவை அனைத்திலும் பரமாத்மா இருக்கும் எண்ணத்தில் ஒரே விதமான அன்பு செலுத்துவான் . இதுதான் அவனுடைய சிறப்பு .
உடலில் தலையினாலும், வாயினாலும் செய்யக் கூடியதை காலினால் செய்வதில்லை. கை கால்களால் செய்யக் கூடியதை தலையால் செய்வதில்லை.
அந்த உறுப்புகளைப் பேணுவதில் கூட வேறுபாடு உண்டு.ஆனால் ,அவை தன்னுடையவை என்ற எண்ணத்தினால் தலை வலித்தாலும், கால் வலித்தாலும் ஒரே விதம் துயரப்படுவான் .
எல்லா உடல் உறுப்புகளிலும் அவனுக்கு அன்பு ஒரே விதம் இருப்பதால் உறுப்புகளில் ஏற்றத்தாழ்வு என்கிற பாவனை கிடையாது அதுபோல …
தத்வஞானி எங்கும் பிரம்மத்தையே காண்பதால் உலகியலில் அவரவர்க்குத் தக்கப்படி மாறுதலாக நடந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மா ஒன்றே என்ற எண்ணமும் .பிரமையும் எங்கும் சமமாக இருக்கும்.
ஆகவே, தனது உறுப்பில் ஏதோவொரு இடத்தில் அடிபட்டாலும் மனிதன் சம பாவனையுடன் அதை குணப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறானே .
அது போல தத்வஞானி நடை முறையில் எந்த ஒரு ஜீவனுக்கோ, ஜீவ சமுதாயத்திற்கோ துன்பம் நேரிடினும் எவ்விதமான வேற்றுமையும் இன்றி அத்துன்பத்தைப் போக்க முயற்சி செய்வான் என விளக்குகிறார் கிருஷ்ணன் .
மேலும் எவர்களுடைய மனம் சம பாவனையில் நிலைத்துள்ளதோ, அவர்களால் உயிர் வாழும் போதே , அகில உலகமும் வெற்றி கொள்ளப்படும்.
ஏனெனில் சத், சித் ஆனந்தமயமான பரமாத்மாவான பரபிரம்மம் மாசற்றது, சமமானது .ஆகவே அவர்கள் சத் சித் ஆனந்தமயமான பிரம்மத்திலேயே நிலை பெற்றிருக்கிறார்கள்.