பூதம் தந்த பொற்காசு

ஒரு இளைஞன் காட்டு வழியாக சென்றான்.

அவன் எதிரில் பூதம் ஒன்று வந்தது. பயந்தான் இளைஞன்.

மனிதா! உன் வீட்டில் ஏழு கலையத்தில் தங்கம் வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள் என்றது பூதம்.

வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தான் இளைஞன்.

ஆறு கலயத்தில் முழுவதும் தங்கம் ஒரு கலயத்தில் பாதி தங்கம் இருந்தது.

மனம் திருப்தி படாத இளைஞன் .செலவு செய்யும் மனம் இல்லாமல், ஆசைப்பட்டான் கலயத்தை நிறப்ப.

தன்னிடம் மனைவியிடம் குழந்தையிடம் உள்ள நகைகளை எல்லாம் கலட்டி கலசத்தில் போட்டுப் பார்த்தான் நிறைய வில்லை.

உழைத்து தங்கம் வாங்கி போட்டான். நிறைய வில்லை.

ஒழுங்காக சாப்பிடாமல், கலசம் நிறைய வில்லை என்ற மன வருத்தத்தில் நோய்வாய்ப்பட்டான்.

பூதத்தை மனதில் நினைத்து இப்படி ஆகிவிட்டேனே என வருந்தினான்.

அவன் முன் பூதம் தோன்றியது.

கொடுத்த பொற்காசுகளை நீயும் உண்டு. பிறருக்கும் கொடுத்திருந்தால் அது பெருகி இருக்கும்.

உன் பேராசையால் உன்னிடம் இருந்தும் யாருக்கும் உதவாமல் போனது என்றது பூதம்.

பேராசை இல்லாத மனிதனிடம் கொடுக்க கலசத்தை எடுத்துக் கொண்டு மறைந்தது பூதம்.

Share.

Leave A Reply