பரிசுகள் வாங்கும் மகிழ்ச்சியில் சிறுவர்கள், கண்ணனின் வண்ண படங்கள் வரையும் ஓவியப்போட்டி.

சிறுவர் சிறுமிகள் அவர்களை அழைத்து வரும் பெற்றோர் என கலைகட்டி கொண்டிருந்தது

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது

எங்கும் மகிழ்ச்சியில் அரவாரம்

ஹரே கிருஷ்ணா
ஹரே ராம
ராம ராம
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே

கோசம் காதுக்கு மனதிற்கும் ஆனந்தம் தந்தது.

செல்வியின் வீட்டில் கண்ணனின் சின்ன பாதம் வாசல் படியில் இருந்து பூஜை அறை வரை.

ஆடி ஆடி கமலபாதம் வருவது போல் அரிசி மாவில் கால் வரைந்து இருந்தாள் பாட்டி.

முறுக்கு அவல் சீடை வெண்ணெய் பால் என படைத்து நாராயணனின் பாடல்கள் பாடி வணங்கிய பின்,

அன்று பிறந்த பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாட பாட்டி தாத்தாவை சோபாவில் உட்கார வைத்து கண்ணனாக வேடம் போட்டிருந்த பேரனை கையில் கொடுக்க.

பேத்தி செல்வி ராதா வேடம் போட்டு கேக்கு வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடி கொடுக்க

அந்தக் கேக்கை கிருஷ்ணன் வாயில் ஊட்டி விட்ட பாட்டி அவள் வணங்கும் கிருஷ்ணனே குழந்தை பேரன் வடிவில் உண்பதைக் கண்டு மகிழ்ந்தாள்.

செல்வி தன் சின்னஞ்சிறு கைகளில் கேக்கின் மேல் இருந்த வெண்ணையை எடுத்து பாட்டி வாயில் ஊட்டி விட…

ராதையே ஊட்டுவதாக எண்ணி மகிழ்ந்தாள் பாட்டி.

கிருஷ்ணரும் ராதையும் என்றென்றும் குழந்தையாக பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

Share.

Leave A Reply