தேவ சந்திரன் எழுதும் உடைந்த கப்பல்
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
நவீன், இன்றே புறப்படுங்கள் உங்களுக்கு வேண்டிய மற்ற குறிப்புகளையும் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்ஐ.சி.
நன்றி சார் என்றான் நவீன்.
கன்னிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் தன் முழு ஆற்றலை காட்டி ஓடத் துவங்கியது.
அக்காவை சந்திக்கலாம்
கடிதத்தில் எழுத முடியாத, அப்படி என்ன விஷயம்!
உன் அத்தான் நடவடிக்கை சரியில்லை! நேரில் வந்து செல். என்று கடிதத்தில் எழுதி இருந்தது.
புகைவண்டி ஓடிக்கொண்டிருந்தது.
பெண்கள் என்றால் எல்லோரும் ஒன்று தான் அக்கா மட்டும் விதிவிலக்கா என்ன?
காலை நேரம், புகைவண்டி கன்னிகுடா ஸ்டேஷனுக்குள் வந்து நின்றது. நவீன் இறங்கி நடந்தார்!
கன்னிகுடா போலீஸ் நிலையத்தில், நவீன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இன்ஸ்பெக்டர் ரவியின் பொருட்கள் எங்கு உள்ளன நான் பார்க்க வேண்டும் என்றார்.
எஸ் சார்! வாங்க காட்டுகிறேன், என்று அழைத்துச் சென்றார்.
போலீஸ் நிலையத்தில்… ஹலோ, இன்ஸ்பெக்டர்! நகரில் உள்ள முக்கிய புள்ளிகளின் விவரம் கொடுங்கள்.
இன்ஸ்பெக்டர் சில படங்களை எடுத்துக் கொடுத்தார் அதில் ஒன்று…
அத்தான் படம் போல இருக்கிறதே தன் கையில் உள்ள படத்தை திருப்பினார்.
அதில் பூபதி தன்வந்தர், ஆதாரம் இல்லாத மொட்டை புகார்கள் உண்டு. என்று எழுதியிருந்து.
இன்ஸ்பெக்டர் இந்தப் படம் என்னிடம் இருக்கட்டும். நான் புறப்படுகிறேன்! அவ்வப்போது நான் தரும் தகவல்களை மேலிடத்திற்கு அனுப்பி விடுங்கள் என்றார் நவீன்.
எஸ் சார்! என்றவரிடம் விடை பெற்றார் நவீன்.
பெரிய கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் நவீன்!
உள்ளே பூபதி பேப்பர் படித்துக் கொண்டு இருக்க… அவரது மகள் லதா கவனித்து விடுகிறாள்.
வாங்க..வாங்க…
வணக்கம்! லதா வரவேற்றாள்.
பூபதியும் வரவேற்றார்!
எங்கே அக்கா எங்கே? நவீன் சுற்றும் முற்றும் பார்த்தார்.
லதா உள்ளே செல்ல முயன்றாள்.
அக்காவை காணோமே என்ற நவீனுக்கு பதில் சொல்ல முடியாமல்…
அது வந்து… என்ன அத்தான் வந்ததும் வராதுமாக குளித்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள் என்றாள் லதா!
அக்காவை பற்றி கேட்டால் வேறு ஏதோ சொல்கிறாளே என்ற சந்தேகத்துடன் அறைக்குள் நுழைந்தார் நவீன்.
லதா விசும்பிக் கொண்டிருந்தாள்.
என்ன லதா ஒன்றும் சொல்லாமல் சிறுபிள்ளை மாதிரி அழுதால் எப்படி?
நவீனை நிமிர்ந்து பார்த்தாள் லதா.
தன் சிற்றன்னை காணாமல் போனதை பற்றி கூறினாள் லதா.
லதா, அக்கா பீரோவை கொஞ்சம் திற பார்க்கலாம் என்றான் நவீன்.
அடுத்து மீனாவின் அறை உள்ளே… பொருட்கள் எல்லாம் சற்று குலைந்து சிவறலாகத் தெரிந்தன.
லதா, பீரோ அருகில் சென்று திறக்க முயன்றாள் அதற்குள்… பீரோ கதவு தானாக திறந்து கொண்டது.
இது என்ன, பீரோ திறந்து கிடக்கிறது? நான் நேற்று பூட்டி வைத்தேனே?
பீரோவை திறந்த லதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
பீரோவில்….
தொடரும்